பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

 'இல்லை; தெரியாதவர்களை அனுப்ப வேண்டாம் என் உத்திர வில்லாமல் என்று உத்திரவு செய்திருந்தேன். அவன் உங்களை இன்னாரென்று தெரியாமல் ஆட்சேபித்திருக்க வேண்டும்' என் றேன். அதுதான் நான் பின் கட்டு வழியாக வரவேண்டிய தாயிற்று மெத்தைக்கு’ என்றார். ஒகோ சரிதான் என்று மனதில் நினைத்துக் கொண்டு "என்ன விசேஷம்” என்று கேட்க, ஒன்றும் விசேஷ மில்லை" என்று சொல்லிவிட்டு, தனக்கு 20 வருடங்களாக இருக்கும் கீல் வாயுவைப் பற்றி பேச ஆரம்பித்து, 5 நிமிஷம் விடாது அதன் கஷ்டங்களையெல்லாம் எனக்குத் தெரிவித்து, கடைசியில் தற்காலம் சுகமாக இருப்பதாகவும், எழுந்து நடக்க முடியும்படி சுவஸ்தமா யிருப்பதாகவும் தெரிவித்தார். அந்த சுவஸ்தம் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து ஆயிருக்கலாகாதா என்று எண்ணிக்கொண்டு, "அப் புறம் என்ன சாமாசாரம்?” என்றேன். அதற்கு அவர் வேறொன்று மில்ல. நான் ஒரு புஸ்தகம் எழுதி அச்சிட்டு முடித்திருக்கிறேன். அதற்கு ஒரு முகவுரை எழுதித் தரவேண்டும், இப்பொழுது நாலு பக்கத்தில் நீ ஒரு முகவுரை எழுதிக் கொடுத்தால் அதையும் அச்சிட்டு அந்த புஸ்தகத்தை திங்கட் கிழமை வெளியிடலாமென்று இருக்கி றேன்” என்றார். இதைக் கேட்டவுடன், நான்கு பக்கத்தில் முகவுரை எழுதுவதாவது இதென்ன கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையா யிருக்கிறதே! என்று ஆச்சரியப்பட்டவனாய்-தற் சமயம் அவரை மெல்ல அனுப்பிவிடவேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து, ‘என்ன புஸ்தகம்?' என்றேன். அவர் 'பாரதச் சுருக்கம்' என்று பதில் உரைத்தார். அம்மட்டும் சுருக்கமா இருக்கிறதேயென்று சந்தோஷித்து, 'புஸ்தகத்தை அனுப்புங்கள்.--பார்வையிட்டு எழுதி அனுப்புகிறேன்' என்றேன். அதைச் சொல்லி முடிப்பதன் முன், தன் பக்கத்தில் வைத்திருந்த ஒரு பெரிய மூட்டையை அவிழ்த்து, இதோ அதை கொண்டுவந்திருக்கிறேன் ' என்று கூறி, மேல் பயிண்டு மாத்திரம் செய்யாத ஒரு புத்தகத்தை என்னிடம் நீட்டினார். " தெய்வமே ' என்று எண்ணிக்கொண்டு அதை வாங்கி அது எத்தனை பக்கங்கள் இருக்கின்றனவென்று கடைசி பக்கத்தைத் திருப்பிப் பார்க்க, 476 பக்கங்கள் இருந்தன. உடனே அவர் முகவுரை நான்கு பக்கங்களில் வேண்டு மென்பதற்குக் காரணம் தெரிந்தது. சரியாக் 60 பாரங்கள். (Forms) இருக்கவேண்டு மென்பது அவர் கருத்து போலும் ! பிறகு நான், 'இந்தப் புஸ்தகத்தை என்னிடம் வைத்து விட்டுப் போங்கள். நான் இதை முற்றிலும் பார்வையிட்டு-பிறகு முகவுரை எழுதித் தருகிறேன் ' என்றேன். அதற்கு அவர், முகவுரை தானே எழுதும்படி கேட்டேன் - அதற்கு புஸ்தகத்தை படித்துப் புார்க்க வேண்டுமோ ? நான் கடைசியில் அச்சிட்ட புஸ்தகத்திற்கு