பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


குருவிகள் கூட்டமாகப் பறந்து செல்வதைக் கண்ட, காகங்களும், புறாக்களும், மைனாக்களும், மரங்கொத்திகளும் கூட்டம் கூட்டமாக அவற்றைப் பின்பற்றிப் பறந்து சென்றன.

பாரதிசாலை முழுவதும் வானவெளியில் ஒரே பறவைக் கூட்டங்களாகக் காட்சியளித்தது.

அதைப் பார்த்து ஒரு சிறுவன்,
காக்கை குருவி எங்கள் சாதி-நல்ல
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம்
நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
காக்கை குருவி எங்கள் சாதி

என்று பாடினான்.

கடற்கரை முழுவதும் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டும், கத்திக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தன. ஒரே திருவிழா மாதிரி இருந்தது.

எங்கே கடலம்மா?
எங்கே கடலம்மா?

என்று எல்லாம் சேர்ந்து கேட்கத் தொடங்கின.