பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பாட்டும் தொகையும் சங்க இலக்கியங்கள் என வழங்கப்பெறும். பாட்டு எனப்படுவது பத்துப்பாட் டாகும்; தொகை எனப்படுவது எட்டுத் தொகை யாகும். பத்துப் பாட்டில் செம் பாகம் ஆற்றுப்படைகளாகும். ஆற்றுப்படை நூல்கள் மனித நேயத்தை மலர்விக்கின்றன. முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை முதலி யன பாட்டோவியங்களாக அமைந்து, பழந் தமிழர் பண்பாட்டினைச் சிறக்க உணர்த்தி நிற்கின்றன. நற்றிணை முதலாக அமைந்துள்ள எட்டுத் தாகை நூல்கள் அகமும் புறமும் திணை யொழுக்கங்களாகக் கொண்டு திகழ்கின்றன. வீட்டு வாழ்வும் நாட்டு வாழ்வும் இந்நூல்களால் விளக்கமுறுகின்றன. 'மூத்தோர்கள் பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்' என்னும் தொடர் பொருள் பொதிந்த வொன்றாகும். உயரிய அரிய நூல்களின் உள்ளடக்கத்தினை எளியோரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் மக்கள் பொற்கால இலக்கியத்தின் பயனை நன்குணர்ந்து துய்ப்பார்களாக. · -சி. பா.