பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பாட்டும் தொகையும்

முளைவாள் எயிற்ற வள்ளுகிர் ஞமலி திளையாக் கண்ண வளைகுடி தெரிதர நடுங்குவனம் எழுந்து கல்லடி தளர்ந்தியாம் இடும்பைசுடர் மனத்தேம் மருண்டுபுலம் படர

-குறிஞ்சிப்பாட்டு: 128-184

எனும் பாடற்பகுதியால் விளக்கமுறும். தலைவன் மகளிரிடம் விளைந்த தீங்கு பற்றி (கெடுதி) வினவும் பாங்கு மனங்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது:

........................ஒண்தொடி, அசைமென் சாயல் அவ்வாங்கு உந்தி மடமதர் மழைக்கண் இளையீர் இறந்த கெடுதியும் உடையேன் என்றனன்......

-குறிஞ்சிப் பாட்டு: 139-142

இதற்கு மறுமொழியாக மகளிர் ஏதும் சொல்லாது இருந்த நிலையினையும், அவர்கள் மறுமொழியினை எதிர்பார்த்து நின்ற தலைவனின் நிலையினையும் நம் மனக்கண்முன் நிழற்படம் ஒடுவதுபோலப் பின்வரும் சொற்களால் கட்சித் திரையில் கவினுறக் காட்டும் கபிலரின் செய்யுள் திறம் நினைந்து நினைந்து வியந்து வியந்து போற்றற் குரியதாகும்.

..................அதனெதிர் சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கிக் கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு சொல்லலும் பழியோ மெல்லிய லீர் என கைவளம் பழுகிய பாலை வல்லோன் கைகவர் நரம்பின் இம்மென இமிரும் மாதர் வண்டொடு சுரும்புருயந்து இறுத்த தாதவிழ் அலரித் தாசினை பிளந்து