பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

137

ஐந்து சுத்தங்கள்: குழந்தை பிறக்கும்போது ஐந்து சுத்தங்கள் அவசியம். சுத்தமான இடம், சுத்தமான துணி, சுத்தமான கைகள், சுத்தமான கத்தி, தொப்புளைச் சுத்தமாகப் பராமரித்தல்.

சீம்பால் அவசியம் : குழந்தை பிறந்தவுடன், எடை எடுப்பது மிகவும் அவசியம். பின்னர், குழந்தையைக் கதகதப்பாக வைக்க வேண்டும். குழந்தை பிறகு 20 நிமிஷத்துக்குள் சீம்பாலைத் தாய் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு வரும் நோய்களைத் தடுக்கும் இயற்கை மருந்து அது. அதாவது, தாய்க்கு 25 ஆண்டுகளாக வந்த நோய்களுக்கான தடுப்பு மருந்தாகச் சீம்பால் விளங்குகிறது.

குழந்தை பிறந்தவுடன், கழுதைப்பால், தேன், சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கக் கூடாது. ஏனெனில், குழந்தைக்கு வயிற்றுப் போக்கும், நோய்த் தொற்றும் ஏற்படும். முதல் 6 மாதங்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில், தண்ணீர் தர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், தாய்ப் பாலில் 80 சதவீத அளவுக்கு நீர்ச் சத்து உள்ளது.

சில நாள்களில் தொப்புள் கொடி தானாகவே விழுந்து, அந்த இடம் ஆறிவிடும். மருந்துகளோ, பவுடரோ போடக்கூடாது . குழந்தையின் முதல் மலம் கறுப்பாக இருக்கும். இரண்டு மூன்று நாள்களில் மஞ்சள் நிறமாக மாறிவிடும். மலம் நீர்த்துப் போவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அடிக்கடி மலம் போவதைப் பற்றியும், பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே, மலம் போவதைப் பற்றியும் பயப்பட வேண்டாம்.

மஞ்சள் காமாலை : பிறந்து 4-வது நாள் முதல் 12-வது நாளுக்குள், குழந்தையின் உடல் சிறிது மஞ்சள் நிறமாக