பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




சோதனைக் குழாய் உருவாக்கும் குழந்தைகள்

க்கள்தொகை அதிகரித்துக் கொண்டிருந்தாலும், ஒரு குழந்தைக்குக்கூட தாயாக முடியாமல் ஏங்கித் தவிப்பவர்கள் ஏறாளம். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.

அறிவியலின் வளர்ச்சி காரணமாக, குழந்தை பெறும் விஷயத்தில் முடியாதவை பல, இந் நாளில் முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளன. சோதனைக் குழாய் முறையில் பெரும் செலவில் கருவை வளர்த்து, குழந்தைப் பேற்றைக் கொடுப்பது. அதற்காக, அதிக செலவில் சோதனைக் குழாய்க் கூடம் ஆகியவை அவசியம்தானா? பதிலாகக் குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளலாமே எனக் கூறுகின்றனர். தத்து எடுப்பது பெருகிவிட்டால், குழந்தை பெற்றுக் கொடுக்கக் கூடிய தம்பதியினர், இதனை ஒரு வியாபாரமாக ஆக்கிவிடக் கூடும்.

சோதனைக் குழாய் முறையில் ஒரு தம்பதியிக்குக் குழந்தை அளிப்பதன் மூலம், அவர்களது வாழ்வை முழுமையடையச் செய்ய முடிகிறது. உலகில் முதல் சோதனைக் குழாய்க்குழந்தை இங்கிலாந்தில் 1978ஆம் ஆண்டு பிறந்தது. மறைந்த டாக்டர் ஸ்டெப்போ