பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

பாப்பா முதல் பாட்டி வரை

தமிகத்தில் பொதுவாகக் காணப்படும் தோல் நோய்களும் அவற்றுக்கான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளும்:

புண் : நுண்ணுயிர்க் கிருமிகளால் ஏற்படும் இந்த நோயால், அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர் சிறுமியர் தான். இந்த நோய் சிறு கொப்புளங்களாகத் துவங்கி புண் ஏற்பட்டவுடன், நெறிக்கட்டு ஏற்பட்டு, காய்ச்சலும் வரும். பெரியவர்களுக்கு அடிக்கடி கொப்புளங்கள் ஏற்பட்டால், சர்க்கரை நோய் உள்ளதா எனப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த நோயால், சிறுநீரகங்கள் பர்திக்கப்படும் அபாயம் உள்ளது. சோப் உபயோகித்துக் குளித்த பின்னர், உயிர்க்கொல்லி மருந்துகளைத் தடவி நோயைப் போக்கலாம்.

பூஞ்சை : பூஞ்சைக் கிருமிகளால் தேமல், படைகள், மற்றும் உள்ளுறுப்புகளைப் பாதிக்கும் நோய்கள் ஏற்படுகின்றன.

முகத்திலும், மார்பிலும், முதுகிலும், தேமல் அதகிமாக ஏற்படுகிறது. இந்த நோயால் அரிப்போ, தொந்தரவோ ஏற்படாது. இது தொற்று நோய் அல்ல. தேமல் உள்ளவர்கள், தங்களுக்குச் சர்க்கரை நோய் உள்ளதா எனப் பரிசோதனை செய்யவேண்டும். 20 சதவிகித சோடியம் தையோ சல்பேட் கரைசலை, இரவில் படுக்கும் முன், தேமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, காலையில் குளித்தால் தேமல் மறையும்.

தலையிலிருந்து பாதம் வரை, எந்தப் பகுதியிலும் படை நோய் ஏற்டலாம். படையானது வட்டமாகவும், மேற்புறம் செதிலுடனும் காணப்படும். அரிப்பு ஏற்படுத்தும், இந்த நோயானது, வீட்டில் படை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும், வீட்டு வளர்ப்புப் பிராணிகளிடமிருந்தும் பரவக்கூடியது.