பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பாப்பா முதல் பாட்டி வரை

நோய்க்குறிகள்: வயிற்றுவலி, மலக்சிக்கல், குமட்டல், உடற்சோர்வு, அசதி, பசியின்மை இவை போன்ற குறிகளுடன், வாந்தி தொடர்ந்து ஏற்படலாம்; அல்லது எடுத்த எடுப்பிலேயே வாந்தி ஆரம்பமாகலாம். முதல் வாந்தியில் சீரணமாகாத உணவு வெளிப்படும். தொடர்ந்து ஏற்படும் வாந்திகளில், கோழையும், பித்த நீரும் கலந்து காணப்படும். பின்னர் வெளியாகும் வாந்திகளில், கோழை, பித்தநீர் இவைகளுடன் இரத்தமும் சிறிது கலந்து காணப்படும். மிகவும் தீவிரமான சமயங்களில் அரைமணிக்கொரு தடவை வாந்தி நில்லாமல் வந்து கொண்டே இருக்கும். தாகம், தலைவலி, வயிற்று நோய் முதலியவை முக்கியமான அறிகுறிகள், நாவானது காய்ந்து வறட்சியாகக் காணப்படும். மூச்சில் ஒருவித புழுக்க வாசனை வீசும். தோல் வறண்டு, சிறிது சூடாகக் காணப்படும். கண்கள் குழி விழுந்து, விழிகளில் ஏக்கப்பார்வை காணப்படும்.

சிகிச்சை : குழந்தையை நடமாட விடாது, படுக்கையில் ஓய்வாகக் கிடத்த வேண்டும். உணவு கொடுக்கக் கூடாது. உலரும் வாயில் ஈரம் உண்டாக்கச் சிறிதளவு ஐஸ் அப்போதைக்கப் போது கொடுக்கலாம். நோய் அதி தீவரமாக இல்லாவிடில், குளக்கோசு கலந்த, ஆறிய வெந்நீர் அல்லது சுக்குப் போட்டுக் கொதிக்க வைத்து ஆறிய வெந்நீர், தேக்கரண்டி அளவு அரைமணிக்கொரு தடவை கொடுக்கலாம்.

இதைத்தவிர, உப்புநீரில் கலந்த 5 % குளுக்கோசு திரவத்தை, ஊசி மூலம் சுமார் 200-400 க.செ. கொடுக்க வேண்டும், கோடீன், சோடியம் பினோபார்பிடால் போன்ற மருந்துகளைக் கொடுத்து வாந்தியை நிறுத்த வேண்டும்.