பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பாப்பா முதல் பாட்டி வரை


குழந்தை

வ்வொரு குழந்தையும் பிறக்கும் போது, உடலிலும் உள்ளத்திலும் பழுதில்லாததாகவும் நலமுடையதாகவும் பிறக்க வேண்டும். அப்பொழுதே அது வளர்ந்து நல்ல குடியாக இயலும். குழந்தை நல்ல விதமாகப் பிறக்குமாறு செய்வதற்காக, இக் காலத்தில் கருப்பமுற்ற பெண்களின் நலத்தைப் பாதுகாக்க வேண்டிய முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. பிறந்த பிறகு ஏற்படுவதைக் காட்டிலும், பிறக்கும் முன்னரே குழந்தையின் உடல் வளர்ச்சியில் மாறுதல்கள் மிகுதியாக ஏற்படுகின்றன. அதனால் கர்ப்பிணிகள், அடிக்கடி மருத்துவரிடம் சென்று உடல்நிலையைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிசோதனை செய்து, அவர்களுக்கு வேண்டிய உணவுத் திட்டத்தை விளக்கிக் கூறுவார்கள். ஏதேனும் நோய் காணின், அதை நீக்குவார்கள். எடுத்துக்காட்டாக, கிரந்தி நோய் (syphils) உள்ள பெண்கள் கருப்பமுற்ற தொடக்கத்திலேயே தக்கவாறு சிகிச்சை செய்துகொண்டால் தான் குழந்தை நலமாகப் பிறக்கும். இல்லையெனில் கருச்சிதைவு உண்டாகும். அல்லது இறந்து பிறக்கும். அல்லது குழந்தை