பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பாப்பா முதல் பாட்டி வரை

இல்லாமலும் கவனித்துக்கொள்ள வேண்டும். பேதி மருந்துகள் பாலைக் கெடுத்துவிடும். மலச்சிக்கல் போக்க, நிலவாகை முதலியன உண்டால், குழந்தைக்கு வயிற்று நோவும், வயிற்று போக்கும் உண்டாகலாம். ஏதேனும் மலமிளக்கி சாப்பிடவேண்டி நேர்ந்தால், பாரபின் (Paraffing) எண்ணெய் மட்டுமே சாப்பிடலாம்.

குழந்தைக்குப் பால் கொடுக்கும் வேளைக்குமுன், தாய் ஐந்து நிமிட நேரம் ஓய்வாக இருக்க வேண்டும். தாய் பகலில் ஒரு மணி நேரம் ஓய்வு கொள்ளுதல் நல்லது. நள்தோறும் சிறிது தூரம் உலவுவதும் நல்லது.

குழந்தை பிறந்த முதல் நாள் 6 மணி நேரத்துக்கு ஒரு தடவை, 5 நிமிஷ நேரம் தாயிடம் பால் குடிக்க வைக்க வேண்டும். இரண்டாம் நாள் முதல் 4 மணி நேரத்துக்கு ஒரு தடவை குடிக்க வைக்க வேண்டும். தாயிடம் முதலில் சீம்பால் ஒரு சிறிதே உண்டாகின்றது. ஆனால், அது குழந்தையின் பசியைத் தணிக்கக் கூடிய அளவினதாக இல்லை. அதனால் குழந்தை பலமாக உறிஞ்சுகிறது. இப்படிச் செய்து, தாயிடம் பால் உண்டாகும்படி செய்கிறது. பால் தராத வேளைகளில், குழந்தைக்குத் தாகமிருப்பதாகத் தெரிந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற்றி இளஞ்சூட்டில் தரலாம். வேறு எதுவும் தரலாகாது.

இரண்டாவது நாளிலிருந்து 3 அல்லது 4 மணிக்கு ஒரு தடவை தாயிடம் பால் கொடுக்கும்போது, குழந்தையை 10 நிமிஷ நேரம் குடிக்க விட வேண்டும். சில குழந்தைகள் 5-6 நிமிஷத்தில் தனக்கு வேண்டிய அளவு குடித்துவிடும். சில குழந்தைகளுக்கு 15-20 நிமிஷ நேரம் செல்லும். எதுவாயினும் 20 நிமிஷ நேரத்துக்கு அதிகமாகக் குடிக்கவிடலாகாது. ஒவ்வொரு தடவையும், ஒரு தனத்தில் மட்டும் குடிக்கவிட வேண்டுமா, இரண்டு தனங்களிலும்