பக்கம்:பாரதித் தமிழ்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 பாரதி தமிழ்

கீழ்த்திசைக்கும் மேற்றிசைக்கும் நிகழ்ந்திருக்கும் ஸந்திப்பே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஸம்பவ மென்று ரவீந்த்ரர் தம்முடைய முதல் வாக்கியமாகக் கூறினர். ஆசியா ஐரோப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டிய உண்மைகள், ஆசியா ஐரோப்பா விடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய சக்திகள் பல இருக்கின்றன என்பதை ரவீந்த்ரர் மறுக்க வில்லை. இதனை மேற்றிசை உபந்யாஸங்களினிடையே அவர் பன்முறை அங்கீகாரம் செய்திருக்கிரு.ர். இந்தியாவுக்கு வந்த பின்னர் சில ஆங்கிலோஇந்தியப் பத்திராதிபர்களுக்குப் பேரானந்தம் விளையும்படி மிகவும் அழுத்தமான பாஷையில் வற்புறுத்தி யிருக்கிறார். ஆனல் இஃதன்று அ வ ரு ைட ய முக்யோபதேசம். நாம் மேற்றிசையாரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களைக் காட்டிலும், அவர்கள் நம்மிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் அதிகமென்பதே அவருடைய மதம். ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஒற்றுமைப் படுத்தினுலன்றி, உலகத்தில் யுத்தங்கள் நிற்கப் போவதில்லை. ஆசியாவும் ஐரோப்பாவும் ஸ்மத்வம், ஸ்ஹோதரத்வம், அன்பு என்ற தளைகளாலே கட்டப்பட்டாலன்றி, உலகத்தில் ஸமாதானத்துக் கிடமில்லை. ஸமாதானமே யில்லாமல், மனிதர் பரஸ்பரம் மிருகங்களைப் போலே கொலை செய்து கொண்டு வருமளவும், மனிதருக்குள்ளே நாகரிக வளர்ச்சியைப்பற்றிப் பேசுதல் வெற்றுரையேயாகு மென்று கூறி விடுக்க. ஆசியாவையும் ஐரோப்பாவை யும் இங்ஙனம் ஒற்றுமைப்படுத்துதற்குரிய பல புதிய உண்மைகளையும் அறங்களேயம், தம்முடைய அற்புத மான நூல்களாலும், உபன்யாசங்களாலும் தெளிவு படுத்தி மகான் டாகுர் இந்த பூமண்டலத்தையே தமக்குக் கடன்படுமாறு செய்துவிட்டார். இதனை ஜெர்மனி முற்றிலும் நன்முக உணர்ந்துகொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/513&oldid=605988" இலிருந்து மீள்விக்கப்பட்டது