பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


‘ஆங்கிலம் பயிலும் பள்ளியில் போகுநர் நம்பெருமைகளையும் அவற்றை விளைவித்த சான்றோர்களையும் அறிந்திலரே’ என்று கவன்றார்.

அவ்வாறு அறியப்படாது விடுபட்டோரெல்லாரும் நம் நாட்டின் ஏற்றத்திற்கு நல்லடிப்படை அமைத்தவர்கள் என்பதை உணர்ந்தார்.

அன்னாரை யெல்லாம் பட்டியலிடத் தொடங்கினார். அப்பட்டியலில் தமிழகத்துத் தலையாய இலக்கியங்களைப் படைத்துத் தன்னுள்ளங் கவர்ந்த மூவரையும் குறித்தார். அத்துடன் அவர்க்கெல்லாம் முதுகெலும்பாய் உதவிய தமிழ் மன்னர்களையும் குறித்தார்.

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”

என்று தொடங்கி, இடையே, காளிதாசன், பாஃச்கரன், பாணினி, சங்கரன் ஆகியோரைச் சுட்டிக் காட்டி,

“கோன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான் மறை செய்ததும்”
-என்று தொடர்ந்து
“அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர்”

-என்று முடிவு கூற எண்ணியவர் உள்ளம் எரிகிறார். ‘இவையாவும் அறியாது பேடிக் கல்வி பயின்று உழல் பித்தர்கள்’ என்று மக்களைச்சாடிவிட்டு,

14