பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்




பயன்பாடுகள் யாவை என்று நுணுகி ஆய்வதே இலக்கியத் திறனாய்வு. இவ்வாய்வையும் பாரதியார் தம் இயல்பில் காட்டியுள்ளார்.

முன்னர்க் காட்டப்பட்ட,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும்”
-என்ற அடிகள் பாரதியார்

திருக்குறளை நோக்கிய ஆழ்ந்த- நுண்ணிய நோக்கைக் காட்டுவன, இதனைத் திருக்குறள் திறனாய்வின் ஒரு பகுதி எனலாம்.

“சிலப்பதிகாரச் செய்யுள்”, “சிலம்பை இசைத்தது” , “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்னும் தொடர்கள் முன்னர் விளக்கப்பட்ட பாங்கில் நோக்கின் இவை சிலம்பு பற்றிய திறனாய்வுத் தொடர்கள் எனஅறியலாம்.

“எல்லையொன் றின்மை எனும்பொரு ளதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்
முயற்சி”
—எனும் அடிகள் கம்பனது உட்கருத்தை

ஆய்ந்து வெளிப்படுத்துவன. இவ்வாறு கம்பனது,

“புவியினுக் கணியாய்” என்னும் செய்யுளை எடுத்து அதன் பின்னிரண்டு அடிகளை வைத்துத் திறனாய்வு செய்யும் பாங்கில் கவிதை இலக்கியத் திறனாய்வைக் காட்டியுள்ளார்:

“சவி என்பது ஒளி; இது வடசொல்; கம்பன் காலத்தில் இது அதிக வழக்கத்தில் இருந்தது போலும்.

68