பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


றது. அதற்காகத்தாம் படைத்த ஒன்றை ‘இதுதான் இலக்கிய நெறியுடையது’ என்று தாமே போற்றிக்கொள்ளும் சிறு செயல் அற்றவர் பாரதியார். அதனைத் தமது “சுயசரிதை”ப் பாடல்களின் முன்னுரையாக,

“இச்சிறிய செய்யுள்நூல் விநோதமாக எழுதப்பட்டது. ஒருசில பாட்டுகள் இன்பமளிக்கக்கூடியன வாகும். பதர் மிகுதியாக கலந்திருக்கக்கூடும்.”
-என்று எழுதியிருப்பதுகொண்டு உணரலாம்

இதனைத் தம் இலக்கியத்திற்குத் தாமே செய்யும் திறனாய்வு எனலாம். நிறை குறை இரண்டையும் கூறும் நேரிய இலக்கிய பார்வைக்கு இஃதொரு எடுத்துக்காட்டும் ஆகும்.

இதுபோன்று தாம் படைத்த “பாஞ்சாலி சபதம்” காப்பியத்தாலும் அவருக்கு ஒரு நிறைவு ஏற்பட்டதாகப் படவில்லை. அதனால்தான்,

“பிறருக்கு ஆதர்சமாக (மூலமாக) அன்று வழிகாட்டியாக” -இதனை எழுதி வெளியீடுவதாக அதன் முன்னுரையில் குறித்தார்.

தமிழின் இலக்கியப் பெருங்கடலை எண்ணி எண்ணிப் பூரித்த பாரதியாருக்கு அவற்றைத் தொடர்ந்து பேரிலக்கியங்கள் மிகுதியாக எழாமல் போன குறை உள்ளத்தில் எழுந்து

பா. இ.-6

71