பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாரதியின்


கொண்டேயிருந்தது. இவ்வுணர்வைப் “பாஞ்சாலி சபத” நூலை யாருக்குக் காணிக்கையாகப் படைப்பது என்ற கருத்தெழுந்தபோது வெடிக்க விட்டிருக்கின்றார். யாருக்குக் காணிக்கையாக்கினார்?

“தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும்

இயலுமாறு, இனிப்பிறந்து காவியங்கள்

செய்யப் போகிற

வரகவிகளுக்கும்

அவர்களுக்குத் தக்கவாறு

கைங்கரியங்கள் செய்யப்போகிற

பிரபுக்களுக்கும்

இந்நூலைப் பாத காணிக்கையாகச்

செலுத்துகிறேன்”
-என்று காப்பியம் படைப்போருக்கும்

படைப்பிப் போருக்கும் காணிக்கையாக்கினார். இக்காணிக்கையுரை தமிழ் இலக்கியப்பேரார்வத்தில், பாரதியார் எத்துணையளவு துடிப்பாக இருந்தார் என்பதைக் காண்டுகின்றது. இப்படியொரு துடிப்பான உணர்வு அவர்பால் ஊறக் காரணம் என்ன? அவர் இந்நாட்டின்மேல் கொண்டிருந்த பற்றும், தாய்மொழியின்மேல் கொண்டிருந்த ஊக்கமுமேயாகும். இப்பற்றும் ஊக்கமும் இலக்கிய உணர்வைக் கெல்லின. இலக்கியத்தான் நாட்டு நாகரீகத்தின் கண்ணாடி என்று உறுதியாக நம்பினார். இந்நம்பிக்கை அவர் தமிழ்

74