பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. இந்துக்களின்டஒற்றுமை 105

14.இந்துக்களின் ஒற்றுமை:

புராணங்கள் என்னும் தலைப்பில் சிறந்ததொரு கட்டுரையை பாரதி எழுதியுள்ளார். அதில் ஹிந்து மத ஒற்றுமை குறித்துப் பேசுகிறார். பாரதி இந்தக் கட்டுரையில் மிகவும் சிறந்த சில நுட்பமான உண்மைகளை எடுத்துக் கூறுகிறார்.

ஹிந்து மதம் என்பது ஒரு மதமல்ல. இது ஒரு வாழ்க்கை வழி முறையேயாகும். அது பல நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் சமய நெறிகளையும் சடங்குகளையும் ஆசாரங்களையும் கொண்டது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சிகளாலும், சில ஹிந்து விரோதிகளாலும், வேறு சில அடிப்படை மதவாதிகளின் நடவடிக்கைகளாலும் இந்து மதம் என்று கூறப்படும் செய்தி நாட்டில் நிலை பெற்றிருக்கிறது. அது எப்படியிருப்பினும் பாரதி கூறும் சில கருத்துக்களை இங்கு கவனிப்போம்.

“வேதக் கொள்கைகளை எல்லா ஜனங்களுக்கும் உணர்த்தும் பொருட்டு முன்னோர்களால், புராணங்கள் ஏற்படுத்தப் பட்டன. "நான்”, “எனது” என்னும் அகந்தையாலும் பிறருக்குத் தீங்கிழைப்பதும் தமக்குத்தாமே பலவிதமான அச்சங்களும் தீங்குகளும் விளைவித்துக் கொள்வது ஜீவர்களின் இயற்கை. இந்த இழிவு கொண்ட இயற்கையை ஞானத்தீயில் போட்டு பொசுக்கி விடுதல் வேத ரிஷிகளால் ஏற்படுத்தப் பட்ட யக்ஞம் அல்லது வேள்வியின் கருத்து” என்று பாரதி குறிப்பிடுகிறார். இவை கருத்துச் செறிவான வார்த்தைகளாகும்.

நான், எனது, என்பது அகந்தை, தன்னகங்காரம் இதனால் தான் ஒருவன் மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதும் கொடுமைகள் செய்வதும், தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்வதும், அழிவைத் தேடிக் கொள்வதும் நிகழ்கிறது. இவை மனிதனிடம் இயல்பாக