பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ராகவ சாஸ்திரி கதை 12B

17.ராகவ சாஸ்திரி கதை:

ராகவ சாஸ்திரி கதை பாரதியார் எழுதியுள்ள ஒரு அற்புதமான கதை. ராகவ சாஸ்திரி ஒரு மலையாளி. அவர் தன்னை தீயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டார். நாடெல்லாம் சுற்றி சமஸ்கிருதம் மற்றும் இதர இந்திய பாஷைகளைக் கற்றுக் கொண்டவர். அவர் காளிதாஸரிடம் (பாரதி) வந்து.

“எனக்கு விவாஹம் ஆகவில்லை. தனி மனிதன். வேறு டந்துக்களும் இல்லை. ஆதலால் எவ்விதமான குடும்ப பாரமும் கிடையாது. போஜனத்துக்குப் பூர்வீக சொத்து கொஞ்சம் இருக்கிறது. ஆதலால் என் காலத்தை தேசத்துக்காக உழைப்பதிலே செலவிட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிருக்கிறது. தேசத்துக்கு எவ்விதமான கைங்கரியம் பண்ணலாம் என்பதைத் தங்களிடம் கேட்டுக் கொண்டு போகலாம் என்ற நோக்கத்துடன் இந்த ஊருக்கு வந்தேன்” என்று சொன்னார். நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்னும் கருத்தை பாரதியார் இங்கு மிகவும் அழுத்தமாகக் கூறுகிறார். ராகவ சாஸ்திரியுடன் நடைபெறும் உரையாடலில் பாரதி அழுத்தமான சில அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார். அதை நாம் அடிக்கோடிட்டுக் கொள்ள வேண்டும்.

பாரதி மலையாள சாஸ்திரியிடம் “நீர் உலகத்துக்கு என்ன விதத்திலே உபகாரம் பண்ண முடியுமென்பது உம்முடைய கால தே: வர்த்தமானங்களையும் உம்முடைய திறமையையும் பெருத்த விஷயம்” என்று சொன்னார். அதற்கு அந்த சாஸ்திரி றிவாார்.

ஜாதி பேதம் கூடாது. அதற்கு நமது பூர்வ சாஸ்திரங்களில் ஆதாரம் இல்லை. ஆணும், பெண்ணும் சமானம். யாரும் யாரையும் அடிமையாக நடத்தக் கூடாது. இன்று நாம் பிறரை அடிமையாக