பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. ušlnivoa; - Gustvarfirou. 138

ஆட்சியின் ஆதரவாக நடத்தப்பட்டு வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பின்னர் அது நின்று விட்டது.

விடுதலை என்றால் என்ன அர்த்தம்? விடுதலை என்பது என்ன என்பது பற்றி பாரதியார் ஒரு நல்ல விளக்கம் தருகிறார். அது அற்புதமானது. அந்த விளக்கம் அன்றைக்குத் தேவையாக இருந்தது. இன்றைக்கும் அது தேவையாக இருக்கிறது. பெண்கள் விடுதலை என்னும் தலைப்பிலே தான் கவிஞர் அதை விளக்குகிறார். ஆனாலும் அதில் பொதுவான உண்மைகளும் அடங்கியிருப்பதைக் காணலாம்.

“விடுதலையானது யாது? என்ற மூலத்தை விசாரிக்கும் படி நேரிடுகிறது” என்று தொடங்கி, “இதற்கு மறுமொழி சொல்லுதல் வெகு சுலபம். பிறருக்குக் காயம் படாமலும், பிறரை அடிக்காமலும், வய்யாமலும், கொல்லாமலும், அவர்களுடைய உழைப்பின் பயனைத் திருடாமலும், மற்றப்படி ஏறக்குறைய நான் ஏது பிரியமானாலும் செய்யலாம் என்ற நிலையில் இருந்தால் மாத்திரமே என்னை விடுதலையுள்ள மனிதனாகக் கணக்கிடத்தகும். “பிறருக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்டமானதெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை என்று ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் சொல்லுகிறார்.” இந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையான ஆண்களுக்கே விடுதலை உண்டாகவில்லை. ஆனால் இவ்விடுதலை பெரும் பொருட்டாக நாடுதோறும் ஆண் மக்கள் பாடுபட்டு வருகிறார்கள். ஆண் மக்கள் ஒருவருக்கொருவர் அடிமைப் பட்டிருக்கும் கொடுமை சகிக்க முடியாது. ஆனால் இதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள் பெண்கள் கூட்டத்தை ஆண் கூட்டம் அடிமைப் படுத்தி வைத்திருப்பதால் விளைகிறது என்று பாரதி குறிப்பிடுகிறார். சத்தியமான விஷயமாகும். இந்த வாசகங்களைத் திரும்பத் திரும்பப் படித்துப் புரிந்து கொண்டு மனதில் பதிய வைத்துக் கொள்வோமாக.