பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல் Leppe zoznużegoż###st-el சீனிவாசன் 181

மேம்பாடுடைய ஆரியவர்ணங்கள் நான்கிற்கும் புறம்பாகிய நீசக் கூட்டத்தார் நமது தேசம் முன் போலக் கீர்த்திக்கு வர வேண்டு -மானால் உண்மையான வகுப்புகள் ஏற்படவேண்டும். பொய் வகுப்புகளும் போலிப் பெருமைகளும் நசிக்க வேண்டும். இது நம்முடைய வேத சாஸ்திரங்களின் கருத்து” என்று பாரதி கூறி முடிக்கிறார். இந்த விளக்கத்திற்கு மறு விளக்கம் தேவையில்லை. பாரதி தன் காலத்தில் நிகழ்ந்த அரசியல் மற்றும் சமுதாயப் பிரச்னைகள் பற்றி எழுந்த விவாதங்களுக்குப் பதிலளிப்பதைப் போல் இந்தக் கட்டுரை அமைந்திருக்கின்றது. அன்னிய ஆட்சியின் நிர்வாகத்தைப் பற்றிய, பாரதியின் கசப்பான அனுபவங்களையும் நம்மவர்களின் சில இழி செயல்களையும் சுட்டிக்காட்டி வெளிப் படுத்துவதாகவும் இக்கட்டுரை அமைந்திருப்பதைக் காணலாம். இக்கட்டுரையில் அமைந்துள்ள பாரதியின் தமிழ் உரைநடையும் --- அக்காலத்தில் மக்களிடம் பழக்கத்தில் இருந்த பேச்சு மொழியில் சரளமாக அமைந்திருக்கிறது.

இன்று நமது நாட்டில் இந்து சமுதாயத்தின் முழுமையான ஒற்றுமைக்கும் பாரதத்தின் தேச பக்தி உணர்வு உறுதிப் படவும் தேசிய உணர்வு மேம்படவும் முக்கிய தடைகளில் ஒன்றாக இருப்பது இன்றைய ஜாதீய உணர்வு. இந்தத் தடையைப் போக்க பாரதியின் இந்தக் கட்டுரை நல்ல கூர்மையான ஆயுதமாகும்.

xx xx xx