பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTT LLLLLLL LL TCLLLL LCCCL LLLLLLLLkLLSK SLLLS000

29. மதிப்பு: இந்துக்களின் மதிப்பும் மரியாதையும்

மதிப்பு என்னும் தலைப்பிலான கட்டுரையில் பாரதி ஹறிந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும், நம்மை உலகத்தார் முன்னே சிறுமைப் படுத்தி மதிப்பில்லாமல் செய்து கொண்டிருக்கும் புறக் கருவிகளையும் சுட்டிக்காட்டி ஹறிந்துக்களின் மதிப்பை உயர்த்துவதற்கு நாம் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் அவை பற்றிய நமது கடமைகளைப் பற்றியும் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

“ஹிந்துக்களை உலகத்தார் பாமர, அநாகரிக, முக்காற்காட்டு ஜனங்கள் என்று நினைக்கும் படி நாம் இதுவரை இடம் கொடுத்து விட்டோம். இந்தியாவை வெளியுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும் படி செய்த முதல் குற்றம் நம்முடையது. புறக்கருவிகள்

Լl6Ն)

முதலாவதாக, கிறிஸ்தவப் பாதிரி: அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மத விஷயமான பிரச்சாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்து பெரிய பெரிய பொய்களைச் சொல்லி இப்படித் தாழ்ந்து போய் மஹத்தான அநாகரிக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மைப் படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள். ஹறிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள், என்றும், ஸ்திரிகளை (முக்கியமாக அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம் பெண்களை) நாய்களைப் போல் நடத்துகிறார்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்தவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.