பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTL LLLLL LL TLLLy LLLCLL LLLLLLLLLLLLSK SyLLS00

பணியாற்றுகிறார்கள். தங்கள் அமைப்புகள் மூலம் பெண்கள் பொது வாழ்க்கையில் பங்கு கொள்கிறார்கள். ஏராளமான பெண்கள் ஆசிரியர்களாக அரசுப் பணியாளர்களாக, வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக, பேராசிரியர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, நர்ஸ்களாக, என்ஜினியர்களாக பணியாற்றுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களாக, பார்லிமென்ட் உறுப்பினர்களாக மத்திய மாநில அமைச்சர்களாக இருக்கிறார்கள். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பெண்களின் நிலைமையில் Լl հն) முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் பல குறைபாடுகள் பல பகுதிகளில் உள்ளன. அந்தக் குறைபாடுகளையும் களைவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்துப் பெண்களுக்கு இங்கு சொத்துரிமையும் இருக்கிறது. இந்தியா ஒரு பெரிய தேசம். ஆங்காங்கு சில பிரச்னைகள் இருக்கின்றன. அவைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறோம் என்று பதிலளித்தேன்.

“ஐயாயிரம் பேர் கொண்ட இந்த விளக்கு பூசையில் கலந்து கொண்டோர் எல்லாம் மேல் சாதிக்காரர்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள். அந்தக் கோள்வியால் நான் சிரித்துக் கொண்டே இந்தக் கூட்டத்தில் எல்லா சாதிக்காரர்களும் இருக்கிறார்கள். இதில் எந்தவிதமான சாதிவேறுபாடுகளும் பாகுபாடுகளும் இல்லை என்று எடுத்துக் கூறினேன் அந்த வெளிநாட்டுத் தம்பதியினர் அவர்களுடைய சில சந்தேகங்கள் தீர்ந்து மகிழ்ச்சியடைந்தார்கள். இந்தியாவைப்பற்றி இன்னும் பல நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பல தப்பெண்ணங்கள் இருக்கின்றன. அவைகளைப் போக்க நாம் முயற்சிகள் இன்னும் எடுக்க வேண்டும்.

இத்தனை பெரும் பெண்கள் கூட்டத்தை தெய்வபக்தி உணர்வில் ஒன்று திரட்டியதைப் போலவே, தேசபக்திப் பணிகளிலும்,