பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. &!,fuu mubušgi 74

நமது நாடு ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்தது. அந்த அடிமைத்தனம் நம்மை சகல துறைகளிலும் சூழ்ந்திருந்தது. அந்த இருள் விலகி வருகிறது.

“பொழுது புலாந்தது யாம் செய்த தவத்தால் புன்மையிருட்கனம் போயின. யாவும் எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கிங்குன் தொண்டர் பல்லாயிரம் சூழ்ந்து நிற்கின்றோம்”

என்று பாரதி பாடுகிறார்.

எண்ணற்ற தேச பக்தர்கள், சிறந்த அரசியல் தலைவர்கள், தியாகத்தழும்பேரிய தொண்டர் பல்லாயிரம், ஆசிரியர்கள், படிப்பாளிகள், வக்கீல்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், டாக்டர்கள் பலரும் தோன்றி நாட்டுக்கு நல்வழி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நாடு விடுதலை பெறும். அப்போது ஆனந்தக் கூத்தாடி பள்ளு பாடுவோம்” என்று பாரதி சிந்தித்தார்.

விடுதலை கிடைக்குமுன்பே சுதந்திரம் கிடைத்து விட்டது என்று,

“ஆடுவோமே, பள்ளு பாடுவோமே,

ஆனந்த சுதந்திரம் அடைந்து

விட்டோமென்று

ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்று பாடியவர் பாரதி.

xx xx xx