பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 வாங்க வேண்டியிருந்தபடியாலும், மற்றபடி ஆஹார வஸ்துக்கள், ஸேனைக்கு வேண்டிய பண்டங்கள், மனித பலம் முதலிய வேறு பல உதவிகளும் அவசியமாக இருந்த படியாலும், விடுதலை விஷயத்தில் ஏராளமான பக்தி, ஆவேசம் காட்டுவதும், விடுதலை மறுப்புக் கொள்கைகளை மிகவும் ஜாக்கிரதையான, இரண்டு பொருளுடைய மொழி களில் மறைத்துச் சொல்வதும் ஆங்கில மந்திரிகளுக்கு அவஸரமாகவும் இன்றியமையாதன ஆகவும் ஏற்பட்டன. இப்போது சண்டை முடிந்துவிட்டது, அமெரிக்கா மேலே கடன் கொடுக்கக்கூடிய மனமில்லாது போய்விட்டது. மல்லாமல் ஜெர்மானியருக்காக ஒதப்பட்ட தர்ம ஸ்குத் ரங்களையெல்லாம் இங்கிலாந்தும் அனுஸரித்து ஐர்லாந் துக்கு ஸ்வராஜ்யம் கொடுக்க வேண்டுமென்று பல அமெரிக்கத் தலைவர் வற்புறுத்துகிருர்கள். கடன் கொடுக் கவும் மாட்டோம். நம் கீழேயிருக்கும் தேசத்தை வேறு வெட்டிட வேண்டுமென்று வற்புறுத்த வருவானம். தர்ம ஸஅத்ரங்களாம்! தர்ம ஸாதித்ரங்கள் நம்முடைய எதிரிகளிடமுள்ள குற்றங்களை உலகத்தாருக் கெடுத்துக் காட்டுவதற்கு உதவியாகப் பாதிரிகளாலும் பண்டிதர் களாலும் அமைக்கப்பட்டன. நாம் செய்யும் அநியாயங்கள் நம்முடைய ஸெளகர்யத்துக்கு அவசியமானவை. ஸெளகர் யத்தைக் குறைத்துக் கொண்டு தர்ம ஸ்குத்ரங்களைக் கவனிப்பது நமக்குப் பொருந்தாது. இங்ங்னம் பர்யா லோசனை செய்து ஆங்கிலேய மந்திரிகள் விடுதலை மறுப்பு விஷயத்தை முன்போல் இன்பமான பாஷையால் மறைத்து வைக்கும் சடங்கைக்கூடக் கைவிட்டு முரட்டு பாஷையில் கெட்டியாக ஐர்லாந்துக்கு விடுதலை கிடையாதென்று ஸ்ாதிக்கத் தொடங்கி விட்டார்கள். ஐர்லாந்து விஷயமான ரஸ்மிகுந்த லண்டன் ராய்ட்டர் தந்தியொன்று நேற்று வந்தது. அதன் விவரமான வடிவத்தை நேற்றைய