பக்கம்:பாரும் போரும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கிரேக்க நாடு பல நகர அரசுகளாக (City States) விளங்கியது. ஒவ்வொரு நகரமும் மக்களின் உடல் வன்மையைப் பெருக்குவதிலும், படையை வலிமை மிக்கதாக அமைப்பதிலும், பெரிதும் கவனம் செலுத் தியது. கிரேக்க சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு துறையும் போரின் அடிப்படையிலேயே அமைந் திருந்தது.

அந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும், நல்ல வளமுள்ள உடலைப் பெற்றிருக்கிறதா என்று அரசியலாரால் ஆய்ந்தறியப்பட்டது. நலமற்ற உடலைப் பெற்ற குழந்தைகள், மலேயுச்சியிலிருந்து எறிந்து கொல்லப்பட்டன. ஏழு ஆண்டுகள் நிரம்பி யதும், குழந்தைகள் அரசியலாரிடம் ஒப்படைக்கப் பட்டன. மிகவும் துன்பமான வாழ்க்கையையும் ஏற் றுப் பொறுத்துக் கொள்ளும் நிலையில் அவை பெரிய இராணுவப் பள்ளிகளில் வளர்க்கப்பட்டன. இப் பள்ளிகளில் ஏட்டுக்கல்வி அதிகம் இடம்பெறவில்லை. சிறந்த உடற்பயிற்சியும், படைக்கலப் பயிற்சியும், குதிரை ஏற்றமும், தேர் செலுத்துதலும் நன்கு பயிற் றுவிக்கப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து தவறிய இளைஞர்கள் கடுமையாகக் கசையடி கொடுக்கப்பட்டனர். இருபதாம் ஆண்டு கழியப்பெற் றதும், அவர்கள் இராணுவத்தில் சேர்த்துக் கொள் ளப்பட்டனர். முப்பதாண்டு கழியும் வரையிலும், இராணுவ மனையிலேயே (Barracks) வைத்துக்கொள் ளப்பட்டனர். முப்பதாண்டுகளுக்குப் பிறகே, அவர் கள் ஒரு குடிமகனுக்குரிய முழுத்தகுதி பெற்றவர் களாகக் கருதப்பட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/41&oldid=595581" இலிருந்து மீள்விக்கப்பட்டது