பக்கம்:பாலும் பாவையும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 "ஆமாம், ஆமாம் அதைப் பற்றி நான்கூடச சிறிது நேரததுக்கு முன் யோசித்துக் கொண்டிருந்தேன் ” “நல்ல ஆளடா, நீ'-முன்னால் யோசிப்பதற்குப் பதிலாகப் பின்னரில் யோசித்துக் கொண்டிருந்தாயாக்கும்' “என்ன செய்வது?-நாலைந்து நாட்களாக என் மனம் என்னிடம் இல்லை ” ‘எப்படி இருக்கு ம? அதுதான் கொளளை போய் விட்டதே!” 'பார்த்தாயா?-ஒர் ஆணும் பெண்ணும கொஞ்சம் நெருங்கி இருக்கக் கண்டால் நீ மட்டும் இப்படி நினைக்கவில்லை; உலகமே அப்படி நினைக்கிறது!-அதனால்தான் சென்னைக்கு வந்ததும் உன்னுடைய துணையை நாடுவதென்று தீர்மானித்திருந்தேன் .” “எதற்கு?” "வேறெதற்குமில்லை; என்னுடன் இரவில் சில நாட்கள் படுத்துக்கொள்வதற்குத்தான்' “ஏனோ?” 'இந்த உலகத்தில் மனிதன் மனிதனாக வாழ வேண்டுமானால் தன்னுடைய உணர்ச்சியுடன் அவன் நீண்ட நாட்கள் போராட வேண்டியிருக்கிறது அந்த மாதிரி போராட்டத்தில்தான் இப்போது நான் ஈடுபட்டிருக்கிறேன் இருந்தாலும் சில சமயம் என்னிடமே எனக்கு நம்பிக்கை இருப்பதில்லை; அதற்காகத்தான் உன்னுடைய உதவியை நாடுகிறேன் ” “காலை யில் இதைத் தான் நீ என்னிடம் சொல்ல வேண்டுமென்றாயா, என்ன?” "ஆமாம். அதனால் என்ன?” 'ஒனறு மில்லை, நானே இன்று வந்து இங்கே படுத்துக்கொள்ள வேண்டுமென்று இருந்தேன் ” 'ஏன்