பக்கம்:பாலும் பாவையும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 சொல்லி விட்டாள் அது மட்டு மல்ல; “அவரையும் அழைத்துக் கொண்டு வருவது தானே?” என்று அவள் மேற்கொண்டு கேட்டதற்கு, "அவர் ஏதோ வேலையாகப் பம்பாய்க்குப் போயிருக்கிறார்; வருவதற்கு ஒரு வாரமாவது ஆகும் என்றார் எனக்கு வீட்டில் தனியாக இருக்கப் பிடிக்கவில்லை; அதனால்தான் உன்னைத் தேடிக்கொண்டு வந்துவிட்டேன்' என்று வேறு சொல்லித் தப்பித்துக் கொண்டு விட்டாள் இவ்வாறு சொல்லிவிட்ட பிறகுதான் கனகலிங்கத்தைப் பற்றிய ஞாபகம் அகல்யாவுக்கு வந்தது. ஒரு வேளை அவர் நம்மைக் காணாமல் என்ன பாடுபட்டுக் கொண்டிருப்பாரோ!' என்று ஒருகணம் எண்ணி அவள் வருந்தினாள் மறுகணம், 'நம்மைக் காணவில்லை என்பதற்காக அவர் ஒருவேளை சந்தோஷப்பட்டாலும் பட்டிருப்பார்!’ என்று எண்ணி அவள் ஆறுதல் அடைந்தாள இப்பொழுது கடற்கரை நெருங்க, நெருங்க அவளுக்கு இந்திரனைப் பற்றிய ஞாபகம் வந்தது. 'அவன் நம்மை அழைத்துக்கொண்டு எத்தனை முறை இங்கே வந்திருக்கிறான்? என்னவெல்லாம் பேசியிருக்கிறான்? எப்படி எப்படியெல்லாம் நம்முடன் விளையாடியிருக்கிறான்?-எல்லாவற்றையும் ஒரு நொடியில் மறந்து விட்டு அந்தப் பாவி போயே போய்விட்டானே' என்று எண்ணி அவள் நெட்டுயிர்த்தாள். அடுத்தாற்போல் தசரதகுமாரனின் ஏக்கம் நிறைந்த முகம் அவள் மனக்கண்ணில் வந்து உதித்தது பாவம் அவர் எத்தனை முறை இங்கு வந்து நம்மைச் சுறறிச் சுற்றி வந்திருக்கிறார்!அவரிடம் இப்பொழுது கொள்ளும் அனுதாபத்தை நாம் அப்பொழுது கொளளவில்லையே' அவர் எவ்வளவுக் கெவ்வளவு நம்மை நெருங்க அளுசினாரோ, அவவளவுக் கவ்வளவு நாம் அவரைக் கண்டபோதெல்லாம் சிரித்துத் தொலைத்தோமே ' என்று எண்ணி, அவள் உள்ளம் புழுங்கினாள்