பக்கம்:பாலும் பாவையும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இந்தச் சமயததில், “கோட்டையைப் பிடித்ததுபோதும், இறங்குடி அம்மா, இறங்கு' என்று யாரோ சொல்வது போலிருக்கவே, அகல்யா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் கார் மெரீனா கடற்கரை யருகே நின்றிருந்தது; சியாமளா கீழே இறங்கியிருந்தாள் அவ்வளவுதான்; “இதோ, இறங்கிவிட்டேன் மகளே இறங்கி விட்டேன்!” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே, அகல்யா பரபரப்புடன் கீழே இறங்கினாள இருவரும் கைகோத்த வண்ணம் அன்ன நடை'க்குப் பதிலாக யானை நடை நடந்து சென்றார்கள். “இந்த மணலுக்கு மட்டும் வாய் இருந்தால் எத்தனை காதல் கதைகள் சொல்லும், தெரியுமா?” என்றாள் அகல்யா "ஆமாம், உன்னைப் போல் எத்தனையோ காதல் பைத்தியங்களை இந்த மணல் பார்த்திருக்கு மல்லவா?” என்றாள் சியாமளா சிரித்துக்கொண்டே. "رح “போடி, எனக்கு எல்லாம் தெரியும்' என்று அகல்யா, அலைகளுக்கு இடையே சியாமளாவைப் பிடித்துத் தள்ளினாள் “சரி, வாடி! எனக்கும் எல்லாம் தெரியும்” என்று சியாமளா, அகல்யாவின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அலைகளுக்கு இடையே நின்றாள் "நான் மணிவண்ணன் இல்லைடி, மணிவண்ணன் இல்லை!” என்று அகல்யா, சியாமளாவைக் கிள்ளினாள். “நானும் இந்திரன் இல்லைடி, இந்திரன் இல்லை!” என்று சியாமளா, அகல்யாவைக் கிள்ளினாள். இம்மாதிரி, கரையோரத்தில் நின்று இருவரும் கொஞ்ச நேரம் அலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்து விட்டு, ஒரு படகின் மறைவில் உட்கார்ந்தார்கள் அப்பொழுது கடலில் குளிததுவிட்டு நிலவு மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அந்த அறபுதமான காட்சியை அகல்யாவும் சியாமளாவும் பார்தது அனுபவித்துக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவன் வேட்டை நாயைப் போல