பக்கம்:பாலும் பாவையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 யோசிக்கிறீர்களா?” என்று பதட்டத்துடன் கேட்டாள். கனகலிங்கம் விரக்தியுடன் சிரித்தான். சிரித்து விட்டு, “உன்னைக் காதலிக்கலாமா, வேண்டாமா என்று தான் யோசிக்கிறேன்!” என்றான். ‘யோசியுங்கள்; நான்றாக யோசியுங்கள்! காதலிப்பதற்குக்கூட யோசிக்கும் ஒரு புண்ணியாத்மாவை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. எனக்குத் தெரிந்தவரை உலகத்திலேயே நீங்கள்தான் முதன் முதலாகக் காதலிப்பதற்கு யோசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்-எனவே, யோசியுங்கள்; நன்றாக யோசியுங்கள்!-யோசித்துக் கூடிய சீக்கிரத்திலேயே தயவு செய்து உங்களுடைய முடிவை எனக் குத் தெரிவித்து விடுங்கள்!” என்று அகல்யா வயிற்றில் எரிச்சலுடனும், நெஞ்சில் உறுதியுடனும் சொல்லிவிட்டுத் தலை நிமிர்ந்தாள். கனகலிங்கம் அவளை ஒருமுறை ஏற இறங்கப்பார்த்தான். பிறகு, "ஆனால் ஒன்று...”என்று அவன் ஏதோ சொல்ல ஆரம்பித்தான். அகல்யா குறுக்கிட்டு, ‘என்ன..?” என்று கேட்டாள். “சொல்லட்டுமா...?” "தாராளமாய்ச் சொல்லுங்கள்!” “நான் உன்னைக் காதலிக்காமல் கொல்வதைவிடக் காதலித்தே கொன்றுவிடலாம் என்று நினைக்கிறேன்!” அவள் சிரித்தாள்; அவனும் சிரித்தான். “இதற்கு நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டான் கனகலிங்கம். பேதை அகல்யா அவன் சொன்னவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், 'உங்கள் சித்தம் என்பாக்கியம்” என்று சொல்லி, கைகூப்பி வணங்கினாள். அன்றிரவு இருவருக்கும் சாப்பாடு மட்டுமல்ல. துக்கமும் பிடித்தது.