பக்கம்:பாலைக்கலி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கலித்தொகை மூலமும் உரையும் உடைய ஒழுக்கம், 9. கடம் பாலைநிலத்து வழி.10. ஆண்எழில் - ஆடவரில் அழகு. முன்னிய போக வேண்டும் என முன் கூட்டியே கருதி வந்த 11 போறிர் - போல இருந்தீர். நீர், தாயிர் போகின்றீர் என மாற்றி, நீர் அவள் தாய்போலும் எனக் கொள்க. 12. பல உறு - நறுமணப் பொருள்கள் பலவற்றோடு கலக்கும். படுப்பவர் - பூசிக் கொள்வார். அல்லதை - அல்லாது. 15. சீர் - சிறப்பு. கெழு பொருந்திய, 17 தேருங்கால் - ஆராயும் பொழுது, 18. ஏழ்புணர். நரம்புகள் ஏழினும் கூடிப்பிறக்கும். முரல்பவர் - பாடுவார். 22, இறந்த மிக உயர்ந்த, எவ்வம் - வருத்தம். படரன்மின் - கொள்ளற்க, 9. செலவை விட்டனன்! (தலைவியைப் பிரிந்து, பொருள் தேடி வருவதற்குச் செல்ல நினைத்த தலைவனைப், போகாது தடுத்து விட்டாள் தோழி. அந்தச் செய்தியை, அவன் காதலியிடம் சென்று, இப்படித் தோழி உரைக்கின்றாள்.) வறியவன் இளமை போல், வாடிய சினையவாய், சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி, யார்கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல், வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின், அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி, 5 கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல் உலகு போல், உலறிய உயர் மர வெஞ் சுரம் - இடை கொண்டு பொருள்வயின் இறத்தி நீ எனக் கேட்பின், உடைபு நெஞ்சு உக, ஆங்கே ஒளியோடற்பாள்மன்னோ - படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ 10 புடைபெயர்வாய்ஆயினும், புலம்பு கொண்டு இணைபவள்? முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின், பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்மன்னோ - நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகையாகத் துணி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்? 15 பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின், மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்மன்னோ - இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின் அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்? என ஆங்கு - 20 'வினை வெஃகி நீ செலின், விடும் இவள் உயிர் என, புனையிழாய்! நின் நிலை யான் கூற, பையென, நிலவு வேல் நெடுந் தகை நீள் இடைச் செலவு ஒழிந்தனனால், செறிக, நின் வளையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/32&oldid=822023" இலிருந்து மீள்விக்கப்பட்டது