பக்கம்:பாலைக்கலி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கலித்தொகை மூலமும் உரையும் 3. முல்லையின் கருப்பொருள்கள் 1. தெய்வம் மாயோன் (திருமால் அல்லது நெடுமால்). 2. உயர்ந்தோர் குறும்பொறைநாடன், தோன்றல் மனைவி, - கிழத்தி, (அண்ணலும் தொல் - உரை கூறும்). 3. தாழ்ந்தோர் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் (கோவலர், பொதுவர், பொதுவியர், கோவித்தியரும் தொல் உரை கூறும்). 4. புள் காட்டுக்கோழி (சிவலும், தொல் - உரை கூறும்). 5. விலங்கு மான், முயல் (உழையும், புல் வாயும், முயலும் - தொல் உரை). 6. ஊர் பாடி (பாடியும், சேரியும், பள்ளியும் - தொல் உரை). 7. நீர் குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (தொல் - உரையில் குறுஞ்சுனை நீர் இல்லை). 8. பூ குல்லைப் பூ, முல்லைப் பூ தோன்றிப் பூ பிடவம்பூ (தொல் உரை தளவும் கூறும்). 9. மரம் கொன்றை, காயா, குருந்தம். 10. உணவு வரகு, சாமை, முதிரை. 11. பறை ஏறங்கோட் பறை (ஏறுகோட் பறை - தொல் உரை). 12. யாழ் முல்லை யாழ் 13. பண் சாதாரி. 14. தொழில் சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல். அவற்றை யரிதல், கடா விடுதல், கொன்றைக் குழலுதல், மூவின மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடல், கான்யாற்றில் ஆடல். 4. மருதத்தின் கருப்பொருள்கள் 1. தெய்வம் இந்திரன் (வேந்தன்). 2. உயர்ந்தோர் ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி (மனையோள் என்பதும் தொல். உரை கூறும்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/96&oldid=822094" இலிருந்து மீள்விக்கப்பட்டது