பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 நினைவுத்துளிகள் டாக்டர் திருமதி தே. தியாகராசன் எம்.ஏ., பிஎச்.டி., தமிழ் இலக்கிய ஆய்வுக் களத்தில் முதன் முதலாக “டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி திருமதி தே. தியாகராசன் அவர்கள். இடையறாது வீசிய தம் புலமைத் தென்றலால் மதுரை டோக் பெருமாட்டி கல் லூரியை என்றும் இளவேனிலாக்கிக் கொண்டிருந்தவர். சுவிசேஷக் குடும்பத்தில் பிறந்து சுயமரியாதைக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர். மலர்ந்த முகத் தோடு இன்சொல்லைப் படைத்து, விருந்தோம்பும் பண்பினர். இவரும் இவர் கணவரும் பாவேந்தர்பால் உள்ளார்ந்த அன்பு படைத்தவர்கள். கடல் கடந்தும் தமிழ்பரப்ப செக்கோசுலேவியா புறப்பட்ட அன்று. இக்கட்டுரையை அனுப்பி விமானம் ஏறினார். சாலைவிபத்து அவரைச் சடலமாக்கித் தமிழகத்துக்கு அனுப்பி வைத்தது. பாவேந்தர் பற்றிய துணிச்சலான கருத்துக்களை இவர் தூய தமிழில் படைத்திருக்கிறார். 1941ஆம் ஆண்டு திருச்செங்கோடு கழக உயர்நிலைப்பள்ளியில் நான் பத்தாம் வகுப்பு பயிலுங்கால், அங்கு எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் திரு. உலக ஊழியர். பாரதியார் பாடல் ஒன்றில் எனக்கு ஐயமேற்பட்டபோது, அவரிடம் நான் பாரதியார் கவிதைகளைத் தருமாறு கேட்டேன். அதற்கவர் 'பாரதியாரைத் துக்கி விழுங்கும் கவிஞர் தோன்றியுள்ள இந்நாட்களில் நீ பாரதியாரைத் தேடுகிறாயே!” என்றார். அவர் குறிப்பிட்ட கவிஞர் யாரென நான் வினவியபோது, அவர் பாரதிதாசனைக் குறிப்பிட்டார். அவரது