பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 பாவேந்தருடன் சிலர் சூழ்நிலையைத் தயாரித்து எப்போதும் தங்களை அதில் வைத்துக் கொண்டிருந்தனர். தாகூரும், மேலை நாட்டுக் கவிஞர் சிலரும் அப்படித்தான். ஆனால் பாரதிதாசன் முற்றிலும் மாறுபட்டவர். அவர் எப்போதும் தெளிந்த உணர்வு நிலையிலேயே இருப்பார். இன்னும் அவருடைய சொற்களால் சொன்னால் நடைப்பிணங்கள் மத்தியிலே, வறுமையென்னும் தொல்லையிலே அவர் தமது உணர்வை மங்கவிட்டதில்லை; கற்பனையைத் தேடி அலைந்ததில்லை. >k காலைப் பத்திரிகை வந்தது. குவட்டாவில் பூகம்பம்’ என்ற முழுத்தலைப்பு முன்பக்கத்தை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது, சென்னை ஆரிய சமாஜத் தலைவர் பண்டிட் ஞானி என்பவர் பூகம்பத்தால் இறந்து போனார் என்ற செய்தியும் வெளியாகியிருந்தது. இந்த ஞானி இருக்கானே ரொம்ப நல்லவன்; எனக்கு ரொம்ப வேண்டியவன் என்றார் பாவேந்தர். இந்த மாதம் கவிதா மண்டலத்துக்குக் குவட்டா பூகம்பமே தலையங்கமாக இருக்கலாம் என்று கூறினேன் நான். காலை ஏழு மணிக்குப் பத்திரிகை அலுவலகத்திலேயே உட்கார்ந்து எழுதினார். அவர் எழுதத் தொடங்கினால் அடித்தல் திருத்தல் ஒன்றும் இருக்காது. முடிந்த கவிதையை இந்தா என்று மெதுவாகத் துரக்கி எறிவார்; பிறகு அதைப் பார்க்க மாட்டார். அந்தக் குவட்டா கவிதையில் ஒர் உவமை-பானை வெடிக்கையிலெ பருக்கை தப்புவதுண்டோ? உலகக் கவிஞர்களுள் எவரும் கையாளாத உவமை இது. அவருக்கே சொந்தமான, இரவல் வாங்காத தழுவல் இல்லாத கற்பனை! பாவேந்தரின் கற்பனைகளும், உவமைகளும் மிக அற்புதமானவை. அவற்றைச் சுவைத்து மகிழ்வதை விட்டு விட்டு, அவருடைய சொந்தப் பலஹlனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்கள் அறிவில்லாதவர்கள். ஒரு கவிஞனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவன் படைப்பையும் ஒப்பிட்டுப் பேசுவது பொருத்தமற்றது. குயிலின் தோற்றத்துக்கும் அதன் குரலுக்கும் என்ன சம்பந்தம்? கவிஞனைக் காணத் தெரியாத கபோதிகள், தங்களுடைய கையாலாகாத் தனத்தை, அவர் மீது புழுதிவாரி இறைத்து மெய்ப்பித்துக் கொள்கிறார்கள். இனி ஈரோட்டில் திரு.டி.கே.சண்முகத்தின் ஒத்திகைச் சாலைக்குச்