பக்கம்:பிராயச்சித்தம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 லா. ச. ராமாமிருதம் அவ்வளவுதான். ஆளைத் தலைகீழாகக் கவிழ்த்துவிடும் காதலே வெட்கமாயிருந்தது. ஆனால் தப்பவும் முடிய வில்லை. அன்று மணவறையில் அவள் அவனை அனைத்த போது-ஆம் அவள்தான் முதலில் என்னை இங்கிருந்து அழைச்சுண்டு போயிடுங்களேன்! எனும் வேண்டுதலின் வெற்றியாகத்தான் அவள் அணைப்பு அமைந்தது. பார்த்தேளா காத்திருந்தேன் ஜயித்துவிட்டேன். சொல்லவில்லை. சொல்லணுமா என்ன? . என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்களேன்! அப்படிக் கேட்டிருந்தால் அதுகூட அதீதம்தான். ஆனால் என்னை இங்கிருந்து அழைச்சுண்டு போயிடுங் களேன்: நினைக்க நினைக்க திகைப்புக் கூடிற்று. இன்பத் திகைப்பு. அது பற்றித் தூண்டித் திருவா விட்டாலும் அவளைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. "சொல்ல என்ன இருக்கு?" புதிர்ப் புன்னகையுடன் கைவிரித்தாள். வெகு அழகானாள். 'அப்பா ஒரு கையாலாகதவர், அக்கா ராrசி. இடமோ சுடுகாடு. தப்பிச்சா போதும்னு ஆயிடுத்து.' 'நான் வராவிட்டால் என்ன செய்திருப்பாய்?" என்ன செய்திருப்பேன். ஒரு நாள் பொறுக்காது பாழுங்கிணற்றில் விழுந்திருப்பேன். ஆனால் என் துன்பம்