பக்கம்:பிராயச்சித்தம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 129 தர்மராஜனுக்கு சுவாரஸ்யமாயிருந்தது. காத்திருந் தார். 'நான் சொல்றேன். நகை திருட்டே போவல்லே.' "என்னது!’ தர்மராஜன் தன் அதிர்ச்சியை மிக்க சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். "ஆமாம் சாச்சாவே யாருக்கோ கொடுத்திருக்காரு.' 'ஏன்? எதற்கு?’’ 'அப்பிடி வாங்க சொல்றேன். ரொம்ப தோஸ்த் யாராச்சும் வந்து கேட்டிருப்பாங்க. கோயமுத்துரிலே ஒரு கண்ணாலம். சம்சாரம் போவுது. அதன் கழுத்திலே ஒண்னுமில்லே. வெக்கப் படறா. கஷ்டப்படறா. ஆனால் கல்யாணத்துக்குக் கட்டாயம் போயே ஆவணும். ஒருவாரம் ஊரிலே திரும்பிக் கொண்டுவந்து கொடுத்திடறேன். இப்போ புரியுதா? இது மதறாஸ் மட்டும் பழக்கமில்லை, ஊர்லே உலகத்திலேயே எங்கேயுமே நடக்குது, கடன் வாங்கின நகையிலே ஷோக்" தன்னது மாதிரி காட்டிக்கறது. மாப்பசான் 'Necklace" கதை படிச்சிருக்கீங்களா? 'இதே நகையை Bankலே அடமானம் வெச்சிருந்தால் 'இந்த ஷோக் முடியுமா? ஆனால் இங்கே சாச்சாவே ராஜா. சாச்சாவே மந்திரி. சாச்சாவைக் கேக்கறதுக்கு யார்? யார் நகையோ எடுத்து யாருக்கோ கொடுத்துட் டார். ஒரு ரொடேசன்தானே! 'ஆனால் என்ன ஆச்சி? நகையைக் கடன் வாங்கின ஆசாமி ஊரிலேருந்து இல்ல்ை எங்கிருந்தோ தகையைத் திருப்பிக் கொடுக்க காலையோ மாலையோ வந்தா சேட் வீட்டுலே கும்பல். போலீஸ் பந்தோப்ஸ்த். சேட்ஜிதிடீர்னு மர்கயா. ஆள் கஸ்டடியிலே. வந்த ஆள் பயந் பி.-9