பக்கம்:பிராயச்சித்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 33 'பால் கார்டு பணம் டிட்டோ’. 'எலெக்ட்ரிக் கரெண்டை ரெண்டுதடவை கட்’ பண்ணிட்டுப் போயிட்டான். அதனால் வீட்டுக்கார னோடு புகைச்சல். 'வாடகை ரெண்டு மாஸம் நின்றுபோச்சு. நோட்டிஸ் கொடுத்துட்டான். இதே காரணமா இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னால் ரெண்டு வீடு மாறியாச்சு. மேம்பாலத்து வீடுக்கு முன்னாலும் மாறியிருக்கிறோம். உங்களிடம் நான் சொல்லல்லே. என்ன தெரியுமா வேடிக்கை? மாற மாற, இடம் குறுகி, வாடகை பெரிசு... தமாஷாயில்லே?

  • எப்போ முழிச்சுண்டேன்? துரங்கினால்தானே முழிச்சுக்க? ஆனால் முழிச்சுண்டே என்னால் என்ன செய்ய முடிஞ்சது? முழிச்சுண்டேயிருக்கேன். தூக்கமே போச்சு, தூக்கத்தைத் தேடறேன், மீளாத தூக்கத்தைத் தேடறேன். அந்த மீளாத தாக்கத்துக்கு என்னோடு ப்ரஸாந்தையும் அழைச்சுண்டு போயிட லாமா என்று கூட நினைச்சிருக்கேன், போங்களேன்!”

குத்துவிளக்கில் சுடர் புக் புக் கென்று தத்திற்று. போனதடவை நீங்கள் என்னைச் சந்தித்தபோது, என்னை நீங்கள் கண்ட நிலையைக் காட்டிலும் நிலைமை மோசமாகப் போ யி டு த் து. சுகமா சந்தோஷமா வாழணும்னு ரெண்டுபேருமா சம்பாதிக்கிறோம். ஆனால் சந்தோஷம், கைவழிய ரெண்டுபேர் சம்பளத்தில் இல்லை. தேவைகளைப் பெருக்கிக் கொண்டதுதான் மிச்சம் அப்புறம் அந்தத் தேவைகளுக்கு ஈடு கொடுக்க என்ன சம்பாதிததும் பற்றவில்லை. நிலைமை விருத்தியுமாக வில்லை. கலியாணமானதும் என் கடமை, அடுப்பு, கணவன், குழந்தைகள் என்று உணர்ந்து அந்த மட்டில் பி.-3