பக்கம்:பிள்ளை வரம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 பிள் 2ள வரம் களும், அம்மாயிமார்களும் கொடுத்த தேர்க்காக" கொண்டு சிறுவர்கள் வாங்கிய சிக்கி. புல்லாங்குழல் ஒசை ஊர் முழுதும் கேட்கும். சின்னப்பனுக்குக் காசு கொடுக்க வேறு நெருங் கிய உறவினர்கள் இல்லை; அவன் தாய்தான் பொங் கலன்று இரண்டணுக் கொடுப்பாள். அதைஎடுத்துக் கொண்டு அவன் தேர்க் கடையெல்லாம் சுற்றி வேடிக்கை பார்த்துவிட்டுக் கடைசியில் தனக்கு விருப்பமான பொருளை வாங்கிக்கொள்ளுவான். ஒவ்வொரு திருவிழாவிலும் என்ன என்ன வாங்குவ தென்று அவன் நெடுநாள் எண்ணி எண்ணிக் கனவு கண்டுகொண்டிருப்பான். அவன் ஈட்டிக் கொம்பனே அருமையாக வளர்த்து வந்த அந்த ஆண்டிலும் வழக்கம்போல் கார்த்திகையில் மாரியம்மன் பொங்கல் வந்தது. அதில் என்ன வாங்குவதென்பதில் அவனுக்கு இரண்டுபட்ட எண்ணமே உண்டாகவில்லை. ஒரே ஆசைதான் அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. அதையும் நிறைவேற்றிக் கொள்ளும் காலம் நெருங்க தெருங்க அவனுக்கு உண்டான குதூகலத்திற்கு எல்லையே இல்லை. சின்னப்பனுக்கு அவன் தாய் பொங்கலன்று வழக்கம்போல இரண்டணுக் கொடுத்தாள். 'அம்மா, இன்னும் இரண்டணுக் கொடு” என்ருன் பையன். எதிர்பாராத இந்த வேண்டுகோள் தாய்க்கு முதலில் ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. ‘'எதுக்கு நாலணு; ரெண்டனப் பத்தாதா?” o, .3% "பத்தா தம்மா; நாலணு வேணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/123&oldid=825034" இலிருந்து மீள்விக்கப்பட்டது