பக்கம்:பிள்ளை வரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ரங்க போயன் பகலவன் விழுந்துவிட்டான். மேற்கு வானில் ரத்தக் கறை போன்று அங்கும் இங்கும் செம்மை ஒளித்துண்டங்கள் காண்கின்றன. இருள் பலவேறு வடிவங்களில் பூமியில் அமர்ந்திருப்பது போலத் தோன்றுகின்றன மரங்கள. நாளெல்லாம் உழைத்த கூலித்காரர்கள் சலிப்பினுல் தளர்நடை நடந்து வருகிரு.ர்கள். - - * - * * - * ஆணுல் ரங்க போயன் மட்டும் தெம்மாங்கு பாடிக்கொண்டு பாதை முழுவதுமே போதா தென்று சொல்லும்படியாகப் பெரிய ஆர்ப்பாட்டத் துடன் வந்துகொண்டிருக்கிருன். வேளைவரும் என்று சொல்லி ஆடியுமட்டுங் காத்திருந்தேன் ஊனேயிட்டு வந்தவனை உள்ளுக்குவா என்ருளே தான னன்ன னுன னன்னு தன்ன னன னு ைனன்னு' என்று அவன் பாடுகிருன். தொலைவிலே இரண்டு பேர் இந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வந்தார்கள். ஒருவன், 'யாரது, ரங்க போயன இவ்வளவு குசாலாய்ப் பாடறது? மற்றவன்: "பின்னே அவன் இல்லாமே யாரு? பண்ணைக்காரர் வீட்டுக்குப் பக்கத்தில் வந்துங்கூட வேறு யாரு இப்படிப் பாடுவா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/20&oldid=825100" இலிருந்து மீள்விக்கப்பட்டது