பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. எல்லைவெளி

இதோ ஒரு இருள் ஜந்து என் மண்டைக்குள் ஒரு மூலையில் சுகமாக அமர்ந்துகொண்டு. அவ்வப்போது, ஆக்டோபஸ் ஸின் குளிர்ந்த தும்பிக்கை போன்ற வலிய பற்றும் அங்கத்தை நீட்டி என் மூளை மடிப்பில் கிசுகிக மூட்டுவது போல, சில சமயம் குத்திக்குடைவதுபோல, சிலவேளை அரித்துத் தின்பதுபோல, ஒரோர் நேரம் இறுகக் கவ்விச்சுண்டி இழுப்பது போலெல்லாம் தோன்றுகிறது.

சில கணங்களில் மூலையின் நெளிவு வளைவுகளில், சதுப்பு நிலத்தின் வெடிப்புகளிலும் பிளவுகளிலுமிருந்து உஷ்ணமான ஆவி சுருண்டு எழுந்து அசைவதுபோல், புகை மயமான ஒன்று பொங்கி, மண்டைக்குள் நெடுகிலும் படர்ந்து பரவி, ஒரு கொதி நிலையை உண்டாக்குவது போல் இருக்கிறது.

அந்நேரங்களில் என் மண்டையைத் திறந்து பார்த்தால், அடுப்பில் கொதிக்கும் இட்டிலிக் கொப்பரையின் மேல் மூடியைத் திறந்தால் குப் பென்று சூடான ஆவி எழுந்து மூஞ்சியில் தாக்குவதுபோல், உஷ்ண மயமான புகையோ