பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புண்ணியம் ஆம் பாவம்போம்!

போயி மூட்டை தூக்கிப் பிழையமிலே என்று கூட வசை பாடுகிறார்.

மூட்டைப் பூச்சிக் கடியையும் முணுமுணுப்பையும் எவ்வளவு தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? ஒருநாள் பையன் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டே ஒடிவிடுகிறான்.

அப்படி எல்லாம் நடக்கிறதை விடஅவன் ஒரே போக்காகப் போய்விட்டது நல்லது என்று கூட ஒரு கணம் அவள் மனசுக்குப் படுகிறது. இருந்தாலும் தாய்ப்பாசம் வேறு. சோகம் கவிந்த உள்ளம் வேதனையால் கணக்கிறது.

பாக்கியம் பிள்ளையின் புலப்பத்தை அவ்வப்போது கேட்க நேரும் நிலையில், அதே தெருவில், வசித்த பரதேசி யாபிள்ளை சுவாராஸ்யமான பேர்வழி. அவர்மனம் உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வது கிடையாது. இஸ்டம் போல் கற்பனைகளை வளரவிடுகிற சுபாவம் அதற்கு உண்டு. அந்த மனம் படம் பிடித்துக் காட்டிய சித்திரம் இது.

வேய் இந்தப் பாக்கியம் பிள்ளை இருக்கானே, சுத்த பிசினாறிப் பய, பணத்தைச் செலவு பண்ணவும் பண்ணு வான். கூடவே, ஐயோ பணம் செலவாகுதே செலவாகுதே யின்னு வயிற்றெரிச்சல் படவும் செய்வான். பையனை படிக்க வைக்கிறே, சரி அவன் பிற்காலத்திலே கைநிறையச் சம்பாத் தியம் பண்ணி உனக்குச் செலவுக்குத் தருவான்னுதானே இப்ப நீ செலவு பண்ணுறே? பின்னே புலம்புவானேன்? பையனுக்கு நோட்டுயின்னும் புத்தகமின்னும், துணிமணி யின்னும் ஏகப்பட்ட பணம் செலவாகுது வேய் இன்னு என்கிட்டே இவன் அடிக்கடி புலம்புவான். இப்போ அவன் செலவு செய்த எல்லாப் பணமும் அநியாயமா நஷ்டமா யிட்டுதே யின்னு ஏங்குறான். ஐயா, அந்தச் செல்லையா பரீட்சையிலே பாஸ் பண்ணி விட்டான்னே வையும்.