பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 & புண்ணியம் ஆம் பாவம்போம்!

ஞாபகத்திலேயே இருப்பியா; உடனே நான்தான் கூப்பிடுதனாக்கும்னு நெனச்சிக்கிட்டு, ஆத்துக்கு கிளம்பிருவே. அது என்னை மாதிரியே உருவம் காட்டி உன்னோட கூட வரும் சரியான இடமும், நேரமும் வாய்ச்சதும், உனக்குள்ளே ஒரு மாதிரி பயம் தோணும். அம்புட்டுத்தான். அது உன்னை அடிச்சுப் போடும்...”

வள்ளி ஆச்சி இழுத்து நீட்டி சுவாரஸ்யமாகப் பேசப் பேச, சிவகாமிக்கு உடல் நளுக்கிக் கொடுத்தது. மனசிலே ஒருவிதமான பீதி பிறந்தது. நெசம்மாவா ஆச்சி, இது மாதிரில்லாமா நடக்கும்?’ என்று மெதுவாகக் கேட்டாள்.

நடக்குமாவாவது நடந்திருக்கேட்டி, நம்ம ஊரிலேயே டந்திருக்கு”, என்று பெருமையாகச் சொன்னாள் ஆச்சி.

‘எப்ப ஆச்சி? பேத்திக்கு உள் பயத்தோடு, விஷயத்தை தெரிந்து கொள்ளவேணும் என்ற அவாவும் வேலை செய்தது. இப்படி இரி, சொல்லுதேன், என்றால் ஆச்சி. இன்னம் நல்லா இருட்டலே. கொஞ்சம் நேரம் கழிச்சு விளக்கை பொருத்தலாம்’, என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ஆரம்பித்தாள் - * . -

நம்ம மேலத் தெரு இரை கக்கியா புள்ளை இருக்காருல்லா...’

‘அது யாரு ஆச்சி இரை கக்கியா புள்ளை? அப்படியுமா ஒரு ஆளுக்கு பேரு இருக்கு?’ என்று சிவகாமி அதிசயித்தாள். போட்டி: உனக்கு எல்லாம் அதிசயம் தான். அது அவரோட சொந்தப் பேரு இல்ல. அவருக்கு நல்லபேரு உண்டும். வெயிலு கந்தநாத பிள்ளைன்னு. .

‘வெயிலுப் பிள்ளை நல்லா வயிறு முட்ட சாப்பிடுவாறு. சாப்பிடும்போது, சாப்பிட்டு முடிச்சதும் நெறைய தண்ணிரைக்