பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 23

அவள் கீழே விழுந்து, காயப்பட்டு, அழப்போகிறாள் என்று தாத்தா பயந்துகொண்டு அவள் பின்னாலேயே போனார். அடிக்கொரு தரம் தன் பயத்தை ஒலிபரப்பிக் கொண்டி ருந்ததார். எச்சரித்தார்; மிரட்டினார்.

ஒரு நாய் ஓடி வந்தது. அவள் ஒரு கல்லை எடுத்து அதன் மேலே வீசி எறிந்தாள். கல் நாய் மீது படவில்லை.

‘ஏட்டி, நாய் உன்னை கடிச்சுப் போடும் ‘ என்றார் பெரியவர்.

‘அது ஒண்னும் கடிக்காது. அது தான் ஒடியே போயிட் டுதே. நாயைக் கண்டா எனக்கு பயமே கிடையாது. தெரியுமா?” என்று ஜம்பம் அடித்தாள் சிறுமி.

‘நாயிட்டே எல்லாம் சேட்டை பண்ணப்படாது. ஒரு சமயம் இல்லாட்டி ஒரு சமயம் லபக்குனு கடிச்சிரும்!”

வள்ளி எதிர்ப்புரை கூறவில்லை. சுவர் மீது சார்த்தப் பட்டிருந்த ஏணி அவள் கவனத்தைக் கவர்ந்தது. ஒடிப்போய் அதன் படியில் கால் வைத்து ஏறினாள். மூன்று படிகள் ஏறிவிட்டாள். - .

அதன் பிறகு தான் தாத்தா கவனித்தார். பதறினார். “ஏட்டி ஏட்டி, கீழே இறங்கு. கால் தவறி விழப்போறே. ஏணியே சரிஞ்சிரும்... சே, இந்தப் புள்ளை என்ன பாடு படுத்துது’ என்று எரிச்சலோடு குறிப்பிட்டார்.

“ஏன் தான் நீ இப்படி பயப்படுறியோ?” என்று கேட்ட படி கீழே குதித்தாள் வள்ளி.

‘இப்படி எல்லாம் குதிக்கப்படாதுன்னு எத்தனை தடவை சொல்றது? காலு கையி முறிஞ்சிரப் போகுதுட்டீ!’ என்று பெரியவர் கத்தினார்.