பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெரியவர்கள்

மேல்நிலைப் பள்ளி ஒன்றில்,

எட்டாவது வகுப்பு. புவியியல் பாடம் நடக்கும்நேரம்.

ஆசிரியர் ஆராவமுதன் தேசப்படத்தை சுட்டிக்காட்டி, பாடநூலில் உள்ள பகுதிகளை வாசித்து விளக்கிக் கொண்டிருக்கிறார். : -

ஒரு பெஞ்சில் இரண்டு பேர், அவர் முகத்தைப் பார்க்காமல், பாடத்தையும் கவனிக்காமல், டெஸ்கின் மீது ஒரு நோட்டை வைத்து சுவாரஸ்யமாக எதையோ பார்த்தபடி இருக்கிறார்கள்.

ஆசிரியரின் பருந்துப் பார்வை அவர்களைக் கொத்தியது.

அங்கே என்ன நடக்கிறது? அது என்ன? இங்கே கொண்டு வா உத்திரவுகள் உதிர்ந்தன இடிக்குரலில்.

சம்பந்தப்பட்ட பையன்கள் தயங்கினர். மற்ற மாணவர் களின் கண்கள் அவர்கள் பக்கம் புரண்டு, பலவிதப் பார்வை களால் அவர்களைத் தொட்டன.