பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் . 49

‘அக்கா, இந்தப் படத்திலே பாரு, எம்.ஜி ரொம்ப ஷோக்கா வாறாரு -

‘ஜெயலலிதா பிரமாதமா டிரஸ் பண்ணியிருக்கிறதாப் ப்ேசிக்கிட்டாங்க - இது மாமியின் குரல்.

என்கிட்டே காசு இல்லையே மாலர் - அக்காவின் குறைபாடு.

‘நான் தாறேனக்கா தங்கச்சியின் தாராளம்.

‘உன்னிடம் ஏது காசு?”

“ஸ்கூலுக்குப்போக, பஸ்ஸுக்கு, டி.பனுக்குண்ணு தாற காசை எல்லாம் சேர்த்து வச்சிருக்கேன். மாமி’

‘அப்போ தினம் நடந்து போயி, நடந்தா வாறே? டிபன் எதுவும் திங்கிறது இல்லையா?”

அப்புறம் சினிமா பார்க்க முடியாதே. மாமி’

இப்போது 11 மணி. 6 மணி ஆட்டத்துக்குப் போகலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.

12 மணி - சினிமாவைப் பற்றி பேச்சு தொடர்கிறது. 1 மணி - மேற்படி பேச்சு நீடிக்கிறது. 2, 3, 4 மணி - சினிமாப் பேச்சு ஒயவில்லை. 4.30 சிங்காரிப்பு நடக்கிறது.

‘நேரமாச்சு நேரமாச்சு!” என்று அவசரப்படுத்தும் ஒலிகள்.

5 மணிக்கு எல்லோரும் சினிமாவுக்கு போகிறார்கள்.