பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 7

மோகன அமைதியை ரசித்திருக்கிரா? பின்னேப் போட்டுப் பேசுதீரே! ஒருவன் எல்லாத்தையும் பார்த்திட முடியாது. நீரு வடதுருவத்துக்குப் போனீரா? துருவப் பிரதேசத்திலே அற்புதமாக ஒளி வீசுமாமே, ஆரோரா பொரியலிசோ என்னமோன்னு, வர்ண மயமான வெளிச்சங்கள், அதை நீரு ரசித்தது உண்டா? இப்படி நானும் கேட்க முடியும்னேன். அப்புறம் அவன் ஏன் வாயைத் திறக்கான்!...”

அவன் பாட்டுக்குப் பேசிக்கொண்டே போனான். கேள்வி கேட்டவர். ஆசாமிக்கு உள்ளுக்குள்ளே ஸம்திங் ராங். இவனிட்டேப் போயி பேச்சுக் கொடுத்தேனே என் புத்தியை செருப்பாலே அடிக்கணும் என்று தன்னையே நொந்துகொள்ளும் உள்ளத்தவராய், வழி யோடு போனார்.

அவன்தானே சிரித்துக் கொண்டான்.

‘பின்னே என்னங்ஙேன்? எல்லாரும் எல்லாத்தையும் பார்த்திட முடியாது. இந்தப் பக்கத்திலே கொஞ்சம் தள்ளி பல ஊருக இருக்கு. அங்கெல்லாம் ரயில் நாகரிகம் எட்டிக்கூடப் பார்க்கலே. மோட்டார் கார் கூட அநேக ஊர்களை ஒதுக்கி விட்டுத்தான் போகுது. அங்கே உள்ள பெரியவர்கள்லே அநேகம் பேரு ரயில் வண்டியில் ஏறினதே கிடையாது. ரயிலை கண்ணால் பார்த்திராதவங்ககூட அங்கே இருக் கிறாங்க. அப்படி இருக்கையிலே. அஹஹ’

அவன் மனம் நடந்துகொண்டிருந்தது, எண்ண்த் தடத்தில். அது எப்போதும் விழிப்புடன் இருக்கும்.

- ஒரு சமயம் ஒருத்தன் எழுதியிருந்ததைப் படிச்சேன். பம்பாய் என்கிற மகாப் பெரிய நகரத்திலே சில தெருக்கள். ‘சிவப்பு விளக்குப் பிரதேசம்’னு போட்டிருந்தான். அங்கே நெருக்கமான வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் எத்தனையோ பெண்கள். உணர்ச்சி அரிப்பும் மன அரிப்பும் கொண்டு, தேடி வருகிற ஆண்களின் அந்தப் பசியைத் தீர்த்துவிடுவதைத்