பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் *93

அப்படியும் இப்படியும் நடந்துபோய் வரலாம்... ஸிட்டியில் சைக்கிள்களும் பெருத்துப் போச்சு. ஜனப் பெருக்கம் அதிகம்.

அந்த வட்டாரத்தில் உள்ள மூன்று தியேட்டர்களும் ஒன்றை அடுத்து ஒன்றாய், ஆட்களை படம் பார்க்கப் பொறுமையோடு இருந்து விட்டு முடிவில் அவசரமும் ஆத்திரமுமாய் வெளியேறும் ஆண்கள் பெண்களை - தெருவில் பரவவிட்டன. அடுத்த காட்சிக்குப்போகிறவர்கள் முட்டி மோதிக் கொண்டு பதட்டமாக முன்னேறினார்கள். கார்கள். காதை அறுக் கும் ஒலிகளை எழுப்பியவாறு, ஜனவெள்ளத்தை வெட்டி முன்னேறி வேகம் பெற முயன்று கொண்டிருந்தன. -

விருப்பம் இல்லாமலே பெரும் கும் பலில் சிக்கிக் கொண்ட சோமுவுக்கு அது வேடிக்கையாகவும் இருந்தது. சினிமா பார்த்துவிட்டுத் திரும்புகிற சந்தோஷத்தில் அற்புத அழகாய் பூத்துக் குலுங்கிய இனிய பெண் முகங்கள் அவனுக்கு நேர் எதிராக வந்து, அவனை ஒதுக்கிவிட்டு அப்பால் நகர்வதும், பகட்டும் வர்ணஜாலங்களை உடைகளில் ஏந்தி மினுக்கிக் கொண்டு அசைந்து நகர்ந்துவரும் வகை வகையான பெண் உருவங்கள் மோதுவனபோல் தோன்றி, நெருங்கி நின்று, துணியால் தடவியபடி விலகிச் செல்வதும் கிளுகிளுப் பூட்டும் இனிய அனுபவங்களாகப் பட்டன அவனுக்கு. - . .

இந்தவிதச் சிறுசிறு இனிமைகளைத் தேடித்தான்

சந்திரனும் சாமிநாதனும் போகிறார்கள். நான் தேடாமலே இவை வலிய வந்த மகிழ்வு தருகின்றன என்று அவன் எண்ணினான். -

தள்ளுவண்டியில் வைத்து வேர்க்கடலை, பட்டாணி விற் கும் ஒருவனிடம் வேர்கடலை வாங்கிக் கொண்டு,