பக்கம்:புதிய பார்வை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 புதிய பார்வை

வது எங்த வேளையிலாவது திட்டம் மாறில்ை அங்த மாறு தலுக்கு ஆளானவனுடைய மனம் ஏதோ பெரிய பிழை செய்து விட்டாற் போல எண்ணி எண்ணித் தவிப்பது உண்டு. இந்தத் தவிப்பை உண்டாக்குவதும் மனச் சாட்சி தான். திட்டமிட்டுக் கொண்ட வழிகளிலிருந்து தவறும் போது இப்படி இடித்துரைக்கிற மனச்சாட்சிப் பண்பு எதுவோ அதை நமக்குள்ளேயே ஒவ்வொரு நாளும் கன்ருக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆக்க நினைவுகள்

சிலருக்கு எங்தப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்தித்தாலும் இருண்ட முடிவுகளே தோன்றும். தெளிவற்ற பல முடிவு களே அடைகிற சிக்தனையைவிடத் தெளிவோடு கூடிய ஒரே முடிவை அடைகிற சிந்தனை உயர்ந்ததாகும்.

மனமும் கினேவுகளும் இருளடைந்து போய் விடாமல் காத்துக் கொள்வதற்கு முயலவேண்டும். எப்போதும் ஆக்க பூர்வமான சிந்தனைகளைச் சிந்திப்பதற்குப் பழகிக் கொண்டால் மனம் மலர்ச்சியடைந்த நிலையிலேயே இருப்ப தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். சிறிதைப் பெரிதாக்கி, இல்லாததை இருப்பதாக எண்ணி காமாகக் கற்பித்துக் கொண்டு வேதனைப்படுகிற கற்பனைத் துன்பங்களே கினே வுக்குள் நுழைய விடாமல் தவிர்க்க வேண்டும். சோர்வு க்ாரணமாகவும், தாழ்வு மனப்பான்மையின் காரணமாக வும் பிறர் நம் முன் பேசுகிற சொற்களே மாறுபட உணர்வ தன் மூலமாகவும் பொய்த் துன்பங்களாக மனத்தில் ஏற். படுகிற பிரமைகளைத் தடுக்க வேண்டும்.

சிங்தனேயில் இருளடைங்த எண்ணங்கள் புகுவதன் காரணமாக மனம் அடிமைப்பட்டுப் போகும். இப்படிக் குருட்டு எண்ணங்களுக்கு அடிமைப்படும்படி மனத்தைச் சோர்ந்த வேளைகளில் கூடப் பழக்கப்படுத்தலாகாது. செல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/126&oldid=598200" இலிருந்து மீள்விக்கப்பட்டது