பக்கம்:புதிய பார்வை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி ! 25

வம் காரணமாகவும், செல்வாக்குக் காரணமாகவுமே ஆக்கம் பெறுவதாக கினைத்து மன கலத்தைப் புறக்கணிக் கக் கூடாது.

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் என்று திருவள்ளுவர் அழகாகச் சொல்லியிருக்கிருர், நல்ல மனமும், பொய்க் கலப்பில்லாத எண்ணங்களும் இருந்தால் வாழ்நாள் பெரு கும் என்று நம்பலாம். பெரிய ஞானிகள் தியானம் செய் வதை இரண்டு வகையாகப் பிரித்திருக்கிருர்கள். சுக்கிலத் தியானம் கிருஷ்ணத் தியானம் என்ற இரு வகைகளில் சுக்கிலத் தியானம் ஒளிமயமாகச் சிந்திக்கப் பழகுவது. "கிருஷ்ணத் தியானம் இருள்மயமாகச் சிந்திக்கப்பழகுவது. இருள் மயமாகச் சிங்திக்கும் சோர்வு மனப்பான்மை வந்து விட்டால் ஞானியும் பாமரனகி விடுவான். அவனுக்கு மன கலமும் அதனல் வருகிற ஆக்கமும் இல்லை. வாழ்க்கையில் காம் பெற வேண்டிய வளங்களில் சிறந்தவை திட்டமிட்ட ஒழுங்குகளும், ஆக்கமயமான சிந்தனைகளும்தான். இந்த இரண்டுமே மனிதனுடைய மனத்தை நிறைவாக வைத்துக் கொண்டிருப்பவை என்பதை உணர வேண்டும். சமூகப் பார்வை இருந்தால்தான் இதைச் சாதிக்க முடியும்.

சமுதாய வாழ்க்கை -w .

மனிதர்களின் தனித்தனி ஆசைகளாலும், தனித் தனி கம்பிக்கைகளாலும் விளைகிற பயன்கள் அந்த மனிதனுக் கும் அவன் குடும்பத்துக்குமே சேரும். ஆனல் இத்தகைய கம்பிக்கைகளால் மொத்தமான சமுதாயப் பயன் எதுவும் ஏற்பட முடியாது. ஒரு நகரமோ, காடோ, மக்கள் இனமோ முன்னேறுவதற்கு ஒன்றுபட்ட சமுதாய கம்பிக்கை வேண்டும். ஒவ்வொரு ம னி த அ ைடய, திட்டமிட்ட வாழ்விலும், திட்டமிட்ட சிந்தனைகளிலும் ஒரு பகுதியாவது பொதுவான சமுதாய கம்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/127&oldid=598202" இலிருந்து மீள்விக்கப்பட்டது