பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 கள் பாய்ந்து வரும் இந்தச் சகாப்தத்தின் சிந்தனை களைப் பிரதிபலிப்பதாக எழுத்தாளர்கள் எழுதி வர வேண்டும். இந்தியாவில் மொழிகளின் பிரசினை இருக் கின்றது. மொழியைப் பற்றி விவாதம் செய்வதால் நன்மையில்லை. மொழிகள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், அடிப்படையான சிந்தனை ஒன்றுதான், அதுவே அதிக முக்கியமான விஷயம். இந்திய மொழி களுக்குள் கேசப்பான்மை இருந்து வரவேண்டியது அவசியம்...... இலக்கிய நூல்கள் இக்கால வாழ்க்கையையும் பிரசினைகளையும் பிரதிபலிக்க வேண்டும். வாழ்க்கை காளுக்கு நாள் விஞ்ஞான மயமாயும், நுணுக்கமான முறைகளைக் கொண்டதாயும் மாறி வருகின்றது. மொழிகளில் பொறிகளைப் பற்றியும் தொழில்களைப் பற்றியும் கலைச் சொற்கள் மிகுந்து பெருகி வருகின் றன. ஆங்கில மொழியில் ஆண்டு தோறும் 5,000 சொற்தள் புதிதாகச் சேர்க்கப்படுவதாய்ச் சொல்லப் படுகின்றது. கலைச்சொற்கள் சம்பந்தமாகச் சர்வ தேச கடைமுறையிலுள்ளவைகளை ஒட்டியே காமும் அமைத்துக்கொள்ளலாம் என்று பொதுவான உடன் பாடு ஏற்பட்டிருப்பதைக் கண்டு கான் மகிழ்ச்சியடை கிறேன். இந்திய மொழிகள் புதிதாகச் சொற்களை உண்டாக்கிக்கொண்டிராமல், அவைகளைப் பயன் படுத்திக் கொள்ளும் என்பதில் எனக்குச் சந்தேக மில்லை. பைசைக்கிள் என்ற சொல்லுக்குப் புதிதாக ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்க என்ன அவசியம் இருக்கிறது ? பொதுவான சொற்களையும் சொற் ருெடர்களையும் இ வ் வா று пѣтцо சேர்த்துக் கொண்டு வந்தால், அநேக விவாதங்களுக்கே இடமில் லாமற் போகும். ஒர் உலகம் மாறி காம் அடுத்த விண் உலகுக்குச் செல்வதாகத் தோன்றுகிறது; இனி நாம் பூமியுடன்