பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 வந்தார். அஹிம்சை விரதம் பூண்ட காந்திஜியைப் போன்ற ஒரு மனிதர் அத்தகைய ஆதரவு அளித்தது ஆச்சரியந்தான். ஆகவே, அரசாங்கம் அமைக் துள்ள முறையில், சில சந்தர்ப்பங்களில், தற்காப்புக் காகப் பலாத்காரத்தைக் கையாளும் உரிமையை அவர் கூட ஏற்றுக்கொண்டிருந்தார். இப்போதுள்ள நிலை மைகளில் இந்திய அரசாங்கம் அந்த உரிமையைக் கைவிட முடியாது என்பது வெளிப்படை. இருந்த போதிலும், நாம், தற்காப்புக்காகவே பலாத்காரத்தை உபயோகிப்போம் என்றும், காம் யுத்தத்திற்குத் துண்டுகோலா யிருக்க மாட்டோம் என்றும், அல்லது புத்தத்தைத் தொடங்க மாட்டோம் என்றும், யுத்த சம்பந்தமாக ஆக்கிரமிப்புத் தந்திரங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்றும் தெள்ளத் தெளிவாகக் காட்டி யிருக்கிறேம். -லோகசபைச் சொற்பொழிவு, 26-7-1955. o M Mo முன்னேற்பாடு அவசியம், ஆளுல் போரில் குதிக்கக் கூடாது கான் அதிக நாள் வாழ்ந்து, அதிக அநுபவம் பெற்று வருவதிலிருந்து, அந்த அளவுக்கு ஒரு பிர சினையைத் தீர்ப்பதற்குப் போர் எவ்வளவு பயனற்றது, எவ்ளளவு தீமை நிறைந்தது என்பதை நிச்சயமாக உணர்கிறேன். நாம் பாதுகாப்புத் தளவாடங்களுக் காகச் செலவு செய்ய வேண்டியிருப்பதும், ஒரு படை யையும், கடற்படையையும், விமானப் படையையும் வைத்திருக்க வேண்டி யிருப்பதும் நம் துரதிருஷ்டம் என்றே கருதுகிறேன். இன்று உலகம் அமைந்திருக் கும் நிலையில் இப்படி முன்னெச்சரிக்கையா யிருத்தல் அவசியமாகின்றது. பொறுப்புள்ள பதவியிலுள்ள