பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மகாத்மா காந்தி என்ற தலைப்பில் நேருஜி கூறியுள்ள கீழ் வரும் வார்த்தைகள் என்றும் நமது கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும் : * இன்று பல காரணங்களால் உலகில் இந்தியா மிகுந்த மதிப்பைப் பெற்றிருக்கிறது. அதற்கு முதன்மையான கார னம் மகாத்மா காந்தி. நம்மில் பெரும்பாலோர் அவரைப் பின்பற்றக்கூட அருகதையில்லாத அற்ப ஜனங்களாயிருந்த போதிலும், இந்தியா காந்தியைப் பெற்றிருந்தது.நாம் இதைப்பற்றி நம் உள்ளங்களில் தெளிவாயிருக்க வேண்டும்; அதாவது, நாம் எந்த இழிவான முறைகளிலும் இறங்கக் கூடாது, எந்தவிதப் பலாத்கார முறைகளிலும் இறங்கக் கூடாது, எவ்வித நாகரிகக் குறைவான முரட்டு முறைகளிலும் இறங்கக்கூடாது." தம்மை இந்தியாவின் பிரதம மந்திரி என்ற, பெருமைக் கும் புகழுக்கும் உரிய பதவிப் பெயரால் அழைப்பதைவிட இந் தியாவின் தலைமை ஊழியன் என்று அழைப்பது அதிகப் பொருத்தமாயிருக்கும் என நேருஜி சொல்லியிருக்கிருர். தன் னடக்கத்தையும், பணிவையும் காட்டிக் கொள்ள வேண்டு மென்ற வெறும் சம்பிரதாய வார்த்தைகளல்ல இவை. சாதாரண மக்களிடையிலும், விவசாயிகளுக்கு மத்தியிலும் அவர் வருந்தியுழைத்ததில் கண்ட இன்பமும், மனநிறைவுமே அவ்வாறு அவரை முதல் தொண்டன் எனத் தம்மைக் கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளச் செய்கிறது. நம்மில் எத்தனை பேர்கள் இவ்வாறு நினைக்கிருேம் ? கிராமப் பஞ்சாயத்து முதல் இகர பொது ஸ்தாபனங்கள் வரை உள்ள பதவிகளைக் கடிதமெழுதும் தாள்களில் அச்சிட்டுக் கொள்கிருேம். அப்பதவிகளில்லாத போது, முன்னுள் அப் தவியை வகித்தவர் எனத் தலைப்பில் போட்டுக் கொள் ேெரும். பதவி மோகத்தால் பல தீமைகள் விளைவதையும் ாக்கிருேம். அப்பதவிகளுக்குரிய தகுதியோ, ஆற்றலோ, ப' எதையும் அதற்குத் தரவேண்டிய விலையாகக் | முதுவதில்ஃவ. -